கவிதை
கவிதை - ஆடிவரும் அழகே அலையே...!! - பாலா

20191106170807605.jpg

ஆடிவரும் அழகே அலையே

ஓடிவரும் விழியின் வழியே...!
தேடிவரும் கால்கள் நனைய
பாடிவரும் அலைஓசை கேட்க
தாளமிடும் எந்தன் மனமும்...!
கூடிமகிழ நீயும் வருவாய்..
கோதையவள் துணையே
வேண்டா...!

கருந்தலைக் கடற்புறாவும்
நாடிவரும் காதல்கொண்டு..!
கோலமிடும் உன்னைக்கண்டு
உஞ்சி நீயும் தழுவிடுவாயே
கொஞ்சி திளைத்திடுவாயே..!
கூடிமகிழ நானும் வருவேன்..
கோதையவள் துணையே
வேண்டா...!

ஆடிவரும் உந்தனழகில்
ஆடவரும் அற்பத நிலவும்...!
வெள்ளியலை வீதியினில்
வெண்ணிலா இறங்கி வரும்
கைகோர்த்து களித்திடுவோம்..!
கூடிஆடி மகழ்ந்திடுவோம்..
கோதையவள் துணையே
வேண்டா...!