திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமான ஜாதி வன்கொடுமைகளும் ஜாதி ஆணவக் கொலைகளும் நடக்கின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல்கள் அதிகமாக நடக்கிறது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல் இல்லை என சபாநாயகர் அப்பாவு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் .அவர் சொல்வது ஏற்புடையது அல்ல என்கிறார் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்.
தமிழக அரசை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் தலைவர் சொல்வது போல் எல்லாவற்றையும் மூடி மறைக்கவே பார்க்கிறது. பாளையங்கோட்டையில் ஒரு மாணவர் அறிவாளால் சக மாணவரை வெட்டியது இல்லாமல் தடுத்த ஆசிரியையையும் வெட்டி இருக்கிறார். ஆனால் இது வெறும் பென்சில் தகராறு இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்கிறது அரசு.
பிரச்சனையை பூதாகரமாக்காமல் இருப்பதற்காக சில விஷயங்களை மறைக்கலாம் தவறில்லை ஆனால் அதற்காக முழு உண்மையை மூடி மறைப்பது மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்கும். இதைத்தான் காம்ரேட் சொல்கிறார் தொடரும் ஜாதி மோதல் என்பது சமூக நீதிக்கான அடையாளம் இல்லை.
சமூக நீதி காக்கும் அரசு என்று உதட்டளவில் மட்டுமே சொல்லி வரும் அரசு, இதை முதலில் உணரட்டும்.
Leave a comment
Upload