தொடர்கள்
வலையங்கம்
லஞ்சம் தவிர்

20250031220028629.jpg

2023- 24-ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த் துறையினர் மீதான அதிகபட்சமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியர்கள் மீது 26, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது 22 வழக்குகள் 18 பேர், காவல்துறை 10, பத்திரப்பதிவு 8 இது தவிர வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் கல்வித்துறை, மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை இப்படி லஞ்சம் வாங்கியவர்கள் மீது விசாரணை நடந்து வருவதாக அரசு ஒரு புள்ளி விவரத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் நீக்கமற இருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. நிறைந்த தை அமாவாசை அன்று லஞ்சப் பணம் தாருங்கள் என்று லஞ்சம் வாங்கி ஒருவர் பிடிபட்டிருக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு நிரந்தர வருமானம் பணி பாதுகாப்பு இதர சலுகைகள் என்று அரசாங்கம் தொடர்ந்து அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அப்பாவின் பொதுமக்கள் அரசு ஊழியர்களை "கவனித்தால்" தான் வேலை நடக்கும் என்ற போக்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. அரசு ஊழியர்கள் பஸ்ஸில் ரயிலில் தங்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது அவர்களை விட வசதி குறைவான அப்பாவி ஜனங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உள்ள பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே இந்த லஞ்சப் பேய் ஒழியும்.