தொடர்கள்
வலையங்கம்
கவலைப்பட வேண்டிய விஷயம்

20241120185229840.jpeg

1960 முதல் 80 வரை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக பெரும்பாலும் தமிழர்கள் இருந்தார்கள். தமிழக கோட்டையிலும் சரி டெல்லியிலும் சரி அவர்கள் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறந்தது. தமிழகத்திற்கு வேண்டியவற்றை அவர்களே அமைச்சரிடம் பேசி பரிந்துரை செய்து தமிழர்கள் மீதும் தமிழ்நாடு மீதும் அக்கறை காட்டுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் 'அது அந்த காலம் என்று நாம் பழைய நினைவில் சந்தோஷப்படுவதோடு நிறுத்திக் கொண்டு விடுவோமோ என்ற பயம் நமக்கு தற்சமயம் வர தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் தமிழக மாணவர்கள் அறிவுத்திறனில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று சொன்னாலும் தமிழக மாணவர்கள் முன்பு ஏராளமான மாற்று வாய்ப்புகள் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக அவர்கள் உயர்கல்வியை முடித்துவிட்டு ஐ.டி நிறுவனங்களில் சேரவும் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில் அவர்கள் ஆர்வம் குறைய தொடங்கி இருக்கிறது அவர்களின் வெற்றி சதவீதமும் குறைந்து வருகிறது.

இத்தனைக்கும் தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய பயிற்சி மையங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. சில மனிதநேய அமைப்புகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும் தொடங்கி இருக்கின்றன. அப்படி இருந்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவது ஏன் என்று யோசிக்கும் காலம் இது. அதேசமயம் இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமும் கூட.