திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2020 வரை சட்டசபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை என்று குறை கூறியது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுதோறும் நூறு நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சொல்லி இருந்தார்கள். திமுகவின் எத்தனையோ தேர்தல் வாக்குறுதி போல் இதுவும் கவனிக்கப்படாமல் காணாமல் போனது.
திமுக ஆட்சிக்கு 2021 மே மாதம் வந்தது. அந்த ஆண்டு 28 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்தது. 2022-ல் 35 நாட்களும் 2023ல் 30 நாட்களும் நடப்பாண்டில் இதுவரை 17 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்திருக்கிறது.
சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று பேரவை தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடக்கும். இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள். சட்டசபை எத்தனை நாட்கள் கூடுவது என்பதை அலுவல் ஆய்வு குழு தான் முடிவு செய்யும். சட்டசபை கூடும் நாட்கள் குறைந்ததற்கு அனைத்துக் கட்சிகளுமே பொறுப்பு.
சட்டசபை என்பது மக்கள் பிரச்சனை பேசும் இடம் அரசின் கவனத்திற்கு மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் இடம் சட்டமன்ற உறுப்பினர் அங்கு மக்களின் குரலாக தான் பேசுவார் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் அவரை சட்டசபைக்கு அனுப்புகிறார்கள். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
Leave a comment
Upload