தொடர்கள்
வலையங்கம்
அப்பாவி விவசாயிகள்

20241029150112367.jpg

இந்தியாவில் 60 சதவீதம் வேலைவாய்ப்பு விவசாயத்தில் தான் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

விவசாயிகளுக்கு உரிய கௌரவமும் அங்கீகாரமும் தொடர்ந்து கிடைக்காமல் அரசாங்கம் அவர்களை அலட்சியப்படுத்துவது தொடர்கிறது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போது கூட வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி டெல்டா விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் வடிகால்கள் தூர்வாரப்படாது என்கிறார்கள்.

விவசாயிகள் இதை குற்றமாகவும் புகாராகவும் சொல்கிறார்கள். இது கிட்டத்தட்ட தொடர்கதையாக தான் இருக்கிறது. அரசாங்கம் ஏதோ சாதித்து விட்டது போல் தங்களை தங்களே பாராட்டி கொள்கிறார்கள் மொத்தத்தில் பாவம் விவசாயிகள்.