தொடர்கள்
வலையங்கம்
உடல் பருமனாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

யோசிக்கணும்

20240626192929834.jpg

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் முதல் நாள் நாட்டின் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி பட்ஜெட்டுக்கு முன்தினம் நாடாளுமன்றத்தில் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருந்தாலும் கவலை தரக்கூடிய ஒரு முக்கிய விஷயம் நம் நாட்டில் உடல் பருமனவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது. அது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கவலைப்பட்டு இருக்கிறது.

குழந்தைகளிடம் இந்த பிரச்சனை அதிகரிப்பது உலகிலேயே நம் நாட்டில் தான் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் பருமன் என்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் பலவற்றிற்கு காரணம் உடல் பருமன் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு காரணம் நமது உணவுப் பழக்கங்கள் தான் பெரும்பாலும் வீட்டில் சமைப்பது என்பது விடுமுறை நாட்களில் அபூர்வமாகிவிட்டது ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தவிர பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள் உடல் பருமன் உட்பட பல உபாதைகளுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். ஆனால் சிறுவர்களுக்கு நாம் அதைத்தான் பழக்கப்படுத்தி இருக்கிறோம்.

எனவே அரசாங்கம் அதாவது மத்திய மாநில அரசாங்கம் உடல் பருமனை குறைப்பது உடல் பருமன் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வழிமுறை பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு போன்ற பிரச்சாரத்தை செய்து மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்காமல் மக்கள் தான் யோசிக்கணும்.