திமுக காங்கிரஸ் கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது -செல்வப் பெருந்தகை கருத்து.
ஆமா அது உங்க டிபார்ட்மெண்ட் !!
மத்திய அமைச்சரவையில் வாரிசுகள் - ராகுல் காந்தி.
இதன் மூலம் அண்ணன் இந்த சமூகத்துக்கு சொல்லும் மெசேஜ் !!
பாரதிய ஜனதா வென்றது தான் வேதனையாக உள்ளது - கேரளா முதல்வர் பினாயிராய் விஜயன்.
நீங்க படு தோல்வி அடைந்தது பரவாயில்லையா அப்ப ?
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது - கனிமொழி எம்பி சாடல்
தோ ஆரம்பிச்சுட்டாங்களே !!
அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை :டிடிவி தினகரன்
அவங்களுக்கும் உங்கள சேர்க்கும் எண்ணம் இல்லை !!
பாஜகவுடன் கூட்டணி அமைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி மதுரை ஆதீனம்.
ஆன்மீக அரசியல் ஆதினம் போல் தெரிகிறது இவரு !!
ஜாதிவாரி கணக்கெடுப்பு மோடிக்கு ராமதாஸ் கோரிக்கை.
கோரிக்கைக்கு என்று ஒரு கட்சி இருக்குன்னா அது இந்த கட்சி தான் !!
பிரதமரிடம் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது டாக்டர் ராமதாஸ்.
அவர் தமிழகத்திலும் நிறைய எதிர்பார்த்தார் நடக்கலையே ?
அரசியல் கட்சிகள் நாகரிகத்தை கடைபிடிக்கவில்லை ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகாவத் விமர்சனம்.
தலைவரே தாமரை கட்சி சேர்த்துதான் சொல்றீங்க !!
பணம் அதிகார பலத்துக்கு கிடைத்த வெற்றி ஜி.கே.வாசன்
பொதுவாக தான் சொல்றாரு !!
" மோடி குடும்பம் " வார்த்தையை நீக்க பிரதமர் வேண்டுகோள்.
ஆமா குடும்பம் சொல்லி மந்திரி பதவி எல்லாம் கேட்டு தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சு !!
கட்சி அலுவலகத்தில் தான் இனி பேட்டிகள் இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை.
கண்டிஷனா சொல்லிவிட்டு இருப்பாங்க போல தெரியுது !!
விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டுக்கள் திமுகவுக்கு விழுந்ததால் தர்மபுரியில் பாமக தோல்வி தொல்.திருமாவளவன்.
மற்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி ஓட்டு எங்கே போச்சு ?
சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எடப்பாடி அறிவிப்பு.
சரி விடுங்க !!
தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத பிரதமர் மோடி :சோனியா காந்தி.
உங்கள் கட்சி தோல்விக்கு அவர் ஏன் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் !!
Leave a comment
Upload