தொடர்கள்
கதை
சேத்னா- ஆனந்த் ஶ்ரீனிவாசன் .

20240514063047851.jpg

மும்பையின் முலண்ட் பகுதியில் தனிப் பங்களாவில் வசிக்கும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சித்தார்த்.

அவரின் ஒரே மகள் சேத்னா. கல்யாணம் முடிந்து சொந்த பந்தங்கள் ஒவ்வொருவரும் கிளம்பி போயிருந்தார்கள்.

நாளை புகுந்த வீடான டோம்பிவிலிக்கு அனுப்பவேண்டும்.

.சேத்னாவை விட அவள் அம்மா தான் கண் கலங்கி இருந்தாள்.

“அம்மா நீ கவலைப்படாதே புகுந்த வீட்டில் நான் சமாளித்து விடுவேன் பயப்படாதே. அடிக்கடி சொல்லுவே அப்பா பொண்ணு அப்பா பொண்ணு .அது உண்மை தான் . அப்பா மாதிரி தைரியம் எனக்கு நிறைய உண்டு”.

“இராமாயணக் காலத்து சீதை மாதிரியோ, இல்லை, விபச்சாரி வீட்டுக்கு தன் கணவனைக் கொண்டு விட்ட நளாயினி மாதிரியோ நான் கிடையாது.”

“நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ற ரோஹித் மேல மரியாதையும், அவருடைய பெற்றோர்கள் என்கிற மதிப்பும் எனக்கு நிறைய இருக்கிறது”

.”ஆனால் அவர்கள் முதல் மூன்று மருமகளை அடிமையாக நடத்துகிற மாதிரி என்னை நடத்தினால் அவ்வளவுதான்.”

“ஏதாச்சும் என் விருப்பத்துக்கு மாறி நடந்தார்கள் என்றால் அதன் விபரீத தன்மையை அவர்கள் உணரும் படி செய்வேன்”.

“அப்பா அப்படித்தான் என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் ஸ்பெஷலான ஒரு கிப்ட் எனக்குத் தந்துள்ளார். சமயம் வரும் போது அதை நான் பயன்படுத்துவேன்.”

“நீ மறுபடியும் மறுபடியும் ஒரே பொண்ணைக் கொண்டு சம்சாரிகள் குடும்பத்தில் விட்டு விட்டோமே என்று கவலைப் படாதே”.

சேத்னா அம்மா ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவள்.இயற்கையில் பயந்த சுபாவம்.

அந்தப் பெரிய குடும்பத்தில் நாலாவது மருமகளாகப் போகும் சேத்னா.மாமியார் கொஞ்சம் கடுமையான பேர்வழி. பணக்கார பந்தா மொத்த கன்ட்ரோல் தன் கையில் வைத்து இருந்தார். பிள்ளைகளும் சரி கட்டிய கணவனும் இவள் பேச்சுக்கு அடங்கிப் போக வேண்டும் என்கிற நிர்பந்தம்.

மற்ற மூன்று மருமகள்கள் சாதாரணக் குடும்பத்தில் வந்தவர்கள். அவர்களை டார்ச்சர் செய்வது பழக்கம் எனக் கேள்விப்பட்டுருந்தாள். சேத்னாவின் அம்மா

.

அதுபோல் தன் பெண்ணையும் அவள் டார்ச்சர் செய்வாள் என்று நினைத்தாள் ஒரு தாய்மைக்குரிய. பயம் தான் .அவளுக்கு.

பெரிய குடும்பத்தில் நுழையும் போது வரும் பிரச்சினைகள் அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் அது மாதிரி ஆகக் கூடாது என்கிற கவலையும் கூட.

ஆனால் அப்பாவோ “கோ அஹெட் சேத்னா “என்கிற ரகம்.

திருமணமான முதல் வாரம். காலை 7 மணியளவில் சேத்னா அறையிலிருந்து, வெளியே வந்தவுடன், ஹாலில் இருந்த மாமியார் ராஷ்மி ஒன்று சொல்லவில்லை.

ஆனால் இரண்டாவது வாரம் தலைவலி ஆரம்பம் ஆனது சேத்னாவுக்கு.

டார்ச்சர் என்றால் செக்கு மாடு போல வேலை செய்ய வேண்டும், மேக்கப் போட்டுக்க்க கூடாது, புது புது டிரெஸ் போட்டுக்க கூடாது, புருஷனோட அடிக்கடி வெளியில் போகக் கூடாது, டிவி பாக்க கூடாது, தனியே ஷாப்பிங்க் போக கூடாது, இப்படி பல கூடாது டார்ச்சர்கள்.

“இத பாரு சேத்னா !இப்படித் தாமதமாகத் தூங்கி எழுந்திருக்கும் இந்த முறை இந்த வீட்டுக்கு வேலை செய்யாது.”“சீக்கிரம் எழுந்து மத்த வேலைகளைப் பார்க்கணும்.”

சரி அத்தை என்று சொன்னாலும் மறு நாளும் அவளால் சீக்கிரம் எழ முடியவில்லை.

அந்த வார இறுதியில் மாமியார் ரேஷ்மியின் டார்ச்சர்கள் தொடர....

சேத்னா உடனே தன் அறைக்குச் சென்று, ஒரு டைரியையும் ஒரு சிறிய தோல் பையையும் எடுத்துக்கொண்டு சோஃபாவில் மாமியார் அருகில் அமர்ந்து டைரியின் பக்கத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள்.

ஹோண்டா எலேவெட்டா - 17 லட்சம்

50 இன்ச் ஸ்மார்ட் டிவி - 52 ஆயிரம்

வாஷிங் மெஷின் - 10. ஆயிரம்

சோபா+டைனிங் டேபிள்+படுக்கை - 1. லட்சம்

மிக்சர்+அடுப்பு+மற்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள் - 2 லட்சம்

ரொக்கம் - 15 லட்சம்

டைரியில் எழுதியிருந்ததைப் பார்த்தீர்களா? அத்தை!”

“கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என் அப்பாவுக்கு இந்த வீட்டிலிருந்து அனுப்பிய லிஸ்ட் இது.

நீங்க லிஸ்ட்ல எழுதின எல்லா விஷயங்களையும் அப்பா அனுப்பியிருக்கார். நீங்கள் எல்லாவற்றையும் கல்யாணத்துக்கு முதல்நாளே சரி பார்த்து விட்டீர்கள்.”

ஆனால் ஒரு இடத்திலாவது வர போகிற மருமகள் அன்பானவளாக இருக்க வேண்டும், படிச்சவளா இருக்கணும்னு எழுதியிருக்கீங்களா ??

நாங்கள் இங்குச் செக்கு மாடு அல்ல.

நீங்கள் உங்கள் மகன் ரோஹித்க்கு விலை நிர்ணயம் முடிவு செய்து அதை என் தந்தை எனக்காக வாங்கியுள்ளார்..

“ஆங்... நான் வீட்டை விட்டு புறப்படும் நேரத்தில், என் தந்தை என்னிடம் இந்தப் பையைக் கொடுத்து,

“சேத்னா, உன் புகுந்த வீட்டு மனிதர்கள் உனக்கு எப்படி வேண்டுமானாலும் தொந்திரவு கொடுக்கலாம் தொந்திரவு மற்றும் டார்சரின் எல்லை மீறும் போது இந்தப் பையில் உள்ளதை பயன்படுத்து”.

இந்தப் பையில் என்ன இருக்கிறது என்று மாமியார் ஆர்வமாகவும் கலவரமாகவும் கேட்டார்,

சேத்னா அந்தச் சிறிய பையின் ஜிப்பை மெதுவாகத் திறந்து காண்பித்தாள்.

பார்த்தவுடன் மாமியார் வேகமாக எழுந்து, மூச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு...

“சேத்னா, !நீ இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்திருக்கே! வெயிட் பண்ணு !உனக்கு நல்ல டீ போட்டு வரேன். சாயங்காலமா ரோஹித்த கூட்டிட்டு பிடிச்ச சினிமாவுக்கு போ, என்று கிச்சன் பக்கம் போனார்.

மற்ற மருமகள் எல்லோரும் சேத்னாவிடம் நெருங்கினார்கள்.. “அப்படி என்னடி இந்த பைல இருக்கு ??"

பையில் 32 போர் ரிவால்வர் இருந்தது..