தொடர்கள்
அரசியல்
அல்லி ராஜ்யம் !! மாலா ஶ்ரீ

20240508075346899.jpeg

கடந்த 1999-ம் ஆண்டு பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை ஒருங்கிணைந்த மாநிலங்களாக இருந்தபோது, அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு 5 பெண் எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் பீகாரும் ஜார்கண்டும் தனித்தனியாக மாநிலங்களாக மாறிவிட்டன. பீகார் மாநிலத்தில் இம்முறை நடந்த மக்களவை தேர்தலில் 39 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்தியா கூட்டணி சார்பில் 6 பேர், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 4 பேர் அடக்கம்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 4 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதேபோல், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட லல்லுபிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி வேட்பாளரான லல்லுபிரசாத் யாதவின் மகள் மிசாபார்தி மட்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு, பீகாரிலிருந்து தற்போது 5 பெண் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர்.

இதேபோல், தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் தொடர்ச்சியாக கலைஞரின் மகள் கனிமொழி (தூத்துக்குடி), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி (கரூர்), மற்றும் புதுமுகமாக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா (மயிலாடுதுறை) ஆகிய 5 பெண் எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர் !!

அல்லி ராஜ்யம் !!

2024050807550783.jpeg