தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் கடிதம்

20240431180635996.jpg

Heading : சந்திப்போம் பிரிவோம் -10 - பொன் ஐஸ்வர்யா

Comment : இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடப்பதை முன்னிட்டு, கடந்த ஒரு மாசத்துக்கு மேல மகளிர் ஸ்பெஷல், அனிமல் ஸ்பெஷல், அட்மிஷன் ஸ்பெஷல்னு போட்டு கலக்கிட்டீங்க... அடுத்த வாரம் ' கலெக்சன் ரிசல்ட்' ஸ்பெஷலா?! ஆவலா இருக்கோம். ஏன்னா, செய்திகளை மட்டும் வாசிக்காமல், வித்தியாசமா போடுவீங்களே?!

திலகவதி, சாமிநாதன், பிரபா , சிங்கப்பூர்

Heading : வஞ்சிக்கப்படும் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் மார்க்கம்?- மாலாஸ்ரீ

Comment : கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ஏழை மக்களுக்கு நிலவும் பல்வேறு இடர்பாடுகளை மிக அழகாக விளக்கினீர்கள். ஆனால், இவை எல்லாமே ரயில்வே அதிகாரிகளுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான். இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களும் கண்டுகொள்ளவில்லை. என்றுதான் வடசென்னை மக்களின் வாழ்வாதார பிரச்னை தீருமோ?!

லட்சுமிபதி, துலுக்காணம், மகேஸ்வரி , பொன்னேரி

Heading : வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள் !! ராம்

Comment : சர்வதேச அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்கள் பற்றிய முன்னோட்ட தகவல்களை ராம் அடுக்கி விவரித்த விதம் மிக அழகு! ஆனால், நம்மூர் ஆட்களுக்கு அமெரிக்க கிரேஸ் அதிகரித்துள்ளது. அவர்களின் பிள்ளைகள் அமெரிக்கா சென்று படித்து முன்னேற வேண்டும் என்று பெருங்கடன் பட்டு அனுப்பி வைப்பார். அங்கு பிள்ளைகள் படித்து வேலை பார்க்கும் வரை குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அங்கு பிள்ளைகள் குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகும்போது, இங்கு பெற்றோர் தனிமையில் கிடந்து தவிப்பது சகஜமாகி வருகிறது.

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : தங்க மீன்கள் - ஆரா

Comment : இந்தியாவில் பல்லாண்டுகளாக பிரசித்தி பெற்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை மூடப்பட்ட தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கள் சொல்வதை போல் 'ஜஸ்ட் லைக் தட்' படித்து மறப்பதில் மக்கள் தங்க மீன்களாக உள்ளனர். அதற்கு டிஜிட்டல் பத்திரிகை, குறும்படங்கள் சிறந்த தீனிகளாக உள்ளன என்பதை மறுக்க முடியாது. இவை காலத்தின் கட்டாயம்.

சிவகாமி, பிளாரென்ஸ், பீட்டர் ஜாக்சன் , அபுதாபி

Heading : தங்க மீன்கள் - ஆரா

Comment :உண்மையில் வாசிப்பின் அருமை தெரியாத தங்கமீன்களை தான் நாம் வளர்கிறோம் ! பள்ளிகளில் பாடப்புத்தகம் அன்றி வேறு நல்ல இலக்கண ,இலக்கிய நூல்களையும் வாசிக்க பழக்க வேண்டும்!! பிள்ளைகளின் அறிவு வளர்வது அவர்களின் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது! இன்றைய மாணவர்கள் கவனிப்பு திறன் குறைந்தவர்களாகவோ நினைவு திறன் பாதிப்புக்கு உள்ளாவார்களோ என்று அச்சமாக உள்ளது காரணம் கையில் இருக்கும் கைபேசி அது இருக்கும் தைரியத்தில் அந்த நேரத்து பதில்கள் எடுத்து எழுதுவதால் பிள்ளைகள் கவனிப்பு திறன் மற்றும் நினைவு திறன் குறைபாடு அற்றவர்களாக பெற்றோர்களால் உருவாக்க படுகிறார்கள் இன்றைய தங்க மீன்கள்.

சுலோ மணி - பொன்னேரி

Heading : மஹாராஷ்டிராவில் குறைந்தளவு வாக்குப்பதிவு !! ஏன் ??? - பால்கி

Comment : மும்பையிலேயே வாக்குப்பதிவு மந்தம்னா, பிற மாநிலங்களில் எப்படி அதிகரித்து இருக்கும்? ஓட்டு கேட்க மட்டுமே 5 வருஷத்துக்கு ஒருமுறை எம்பி, எம்எல்ஏ வேட்பாளராக நிற்கிறவங்க வர்றாங்க. அதுவும் ஒருசிலர் தோத்துடுவோம்கிற பயத்துல, பணத்தை கரியாக்க தயங்கி ஒதுங்கிடறாங்க. அதன்பின் ஜெயிப்பவர் காணாமப் போயிடறாங்க. அதுக்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்னு மக்களும் அலைக்கழிக்கிறாங்க. இதுதான் நெசம்!

செபாஸ்டியன், ஸ்டான்லி, சில்வியா , நவிமும்பை, மகாராஷ்டிரா

Heading : மானாம்பள்ளி அனுபவம் - ப ஒப்பிலி

Comment : சரியான த்ரில் அனுபவமா இருந்திருக்கும் போலிருக்கே!

சரளா, கோமதி, தில்ராஜ், பல்லாவரம்

Heading : அப்புவுக்கு அட்மிஷன் கெடச்சுடுச்சு- மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

Comment : அப்புவுக்கு அட்மிஷன் கிடைச்சாச்சுனு ரன்னிங் காமெண்ட்ரி கொடுத்து, எங்க தலையை சுத்த வெச்சிட்டாரு மதுராந்தகம் முனைவர் பத்ரி. அது, ப்ரிகேஜி அட்மிஷன்னு சொல்லப்படாதா?! பயங்கர பில்டப்பா இருக்கு. நாங்க இதெல்லாம் தாண்டி வந்தும் அந்த கில்ட்டி (பயம்) நீடிக்குது. ஏன்னா, எங்க பேரன், பேத்திகளை சேர்க்கும்போது இன்னும் பலமடங்கு அதிகமாகுமே!

கலாவதி கார்த்திக், ஜனனி மணிகண்டன் , பூந்தமல்லி

Heading : தொடர்... சுப்புசாமியின் சபதம்...! -புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 7.

Comment : சுப்புசாமியின் சபதம் 7-வது வாரத் தொடர் வெரி இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு. அதுசரி பாமுகவா, பாமகவா?! அதாவது, பாட்டிகள் முன்னேற்ற கழகமா? பாட்டிகளை மகிழவிடாத கழகமா?! ஒருத்தரை காலை மற்றொருவர் வாரிக்கிட்டே இருக்காங்க!

ஸ்டெல்லா, ராகவேந்திரா, தினகரன் , திருச்செங்கோடு

Heading : காணாமல் போகும் துறைகள் - சத்யபாமா ஒப்பிலி

Comment : சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு தனியார் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் இயற்பியல், கணிதம், வேதியியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு மவுசு குறைந்து காணாமல் போய்விட்டது என்னவோ நிஜம்தான். இவற்றை ஆண்டுதோறும் ஆய்வு செய்து சீரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. பதிலளிக்க ஆள்தான் இல்லை!

சிங்கராஜு, மதிவாணன், செண்பகவள்ளி, திருப்பூர்

Heading : " ஆபத்தான சுற்றுலா பயணம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ஆபத்தான சுற்றுலா பயணமாக மாறும் ஊட்டி கட்டுரையை படித்ததும் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. எந்த அதிகாரிகள்தான் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேலை செய்கின்றனர்? அவர்களின் ஒரே குறிக்கோள் - பண வசூலில் ஈடுபடுவது மட்டுமே! இதில் இ-பாஸாவது வேற ஒண்ணாவது? 'ரூல்ஸை பிரேக் பண்ணுவதில்தான் கிக்கே' என பயணிகளும் அசட்டையாக விபத்தில் சிக்குகின்றனர்.

கோவிந்தசாமி, நிக்கோலஸ், பர்கானா, சிவகங்கை