சென்னை திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியரின் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது கூரையில் சிக்கிக் கொண்டது. அந்தக் குழந்தையை மீட்க எடுத்த நடவடிக்கையை, வழக்கப்படி அந்தப் பரபரப்பு காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வைரலானது.
இந்த காட்சிகளைப் பார்த்து கூடவே குழந்தையின் தாய் மீது பல விமர்சனங்கள் வரத் தொடங்கியது. குழந்தையின் தாயான ரம்யாவிற்கு இந்த விமர்சனங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த விமர்சனங்கள் பொறுப்பில்லாத தாய் என்ற அளவில் இருந்தது, அவரை பெரிதும் பாதித்தது.
குழந்தை வளர்ப்பு என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், எல்லா தாயும் மனப்பூர்வமாக ஏற்று தான் அதை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் உடல் ரீதியாக பிரச்சனை மன அழுத்தம் எல்லாம் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து தான் குழந்தையை பராமரிக்கிறார்கள். இதுதான் எதார்த்தமான உண்மை.
ஆனால், இதையெல்லாம் உணராத விமர்சனம் செய்பவர்களின் கருத்து ரம்யாவை தற்கொலைக்கு கொண்டு சென்று விட்டது. ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை சந்திக்கிறார். இதையெல்லாம் அவர்களால் வெளியே சொல்ல முடியாது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளத்தில் கருத்து சொல்பவர்களின் செயல்பாடு என்பது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை தான் காட்டுகிறது. ரம்யாவின் தற்கொலைக்கு இவர்கள்தான் பொறுப்பு இதற்கு என்ன தண்டனை ? யார் தரப் போகிறார்கள் ?
Leave a comment
Upload