எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் மோடியை யாரும் நம்ப மாட்டார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை.
உங்க கட்சித் தலைவரை உங்க கூட்டணி கட்சியே நம்ப மாட்டேங்குது அத முதல்ல பாருங்க !!
ஆந்திராவில் 81.86 % வாக்குகள் பதிவு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
உங்க அம்மா சத்தியமா உண்மை தானே !! அப்புறம் மாத்தி சொல்ல கூடாது.
மதுவில் தண்ணீர் கலந்து விற்ற சூப்பர்வைசர் உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட்.
இப்ப மிக்ஸிங் வேலையும் டாஸ்மாக்கே பாக்குது போல இருக்கு !!
கார் டிரைவர் வங்கிக் கணக்கில் 205 கோடி பண பரிவர்த்தனை !!
இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய இன்னும் 10 வருஷம் ஆவுனாங்க !!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ரேஷனில் இரண்டு மடங்கு உணவு தானியம் - மல்லிகார்ஜுன கார்கே உறுதி.
தலைவர் எப்பவாச்சும் ரேஷன் கடைக்கு போய் இருக்கிறாரா ?
பிரியங்கா காந்தி போன்றவர்கள் தீவிர அரசியல்வாதிகள் கிடையாது - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்.
அண்ணன் பயப்படுறாரோ !!
தேர்தல் கமிஷன் மோடியின் உத்திரப்படி செயல்படும் பொம்மையாக உள்ளது -மம்தா பானர்ஜி.
ஆனால் செயல்படுது அது உண்மைதானே !!
பதவியை இழக்க உள்ள பிரதமரிடம் இந்து முஸ்லிம் அரசியல் தவிர வேறு திட்டம் எதுவும் இல்லை - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
உங்க கட்சி திட்டத்தை அவர் எடுத்துட்டாரு அதானே விஷயம் !!
கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் - பிரதமர் மோடி.
வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டாராம் !!
வருங்காலத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி மலரும் -செல்வப் பெருந்தகை.
ஸ்டாலின் ஆட்சி தான் காமராஜர் ஆட்சி இ வி கே எஸ் இளங்கோவன்.
ஸ்டாலினால் பிரதமராக முடியுமா ? அமித்ஷா கேள்வி.
இப்ப இந்த கேள்வி தேவையா ?
காவல்துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது - மருத்துவர் ராமதாஸ்.
'மாமுல் 'நிலவரம் மருத்துவருக்கு தெரியும் போல இருக்கு !!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிய அனுமதி அளிக்கவில்லை ஆளுநர் மாளிகை விளக்கம்.
அதான் எங்களுக்கு தெரியுமே !!
மோடிக்கு பதில் அமித்ஷா பிரதமர் ஆவார் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
இத சொல்ல தான் ஜாமினில் வந்தீங்களாக்கும் !!
மத்தியில் ஆட்சி மாறுவதே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு அமைச்சர் மா.சுபிரமணியன்.
இதுதான் அந்த நீட் தேர்வு ரகசியமா !!
அமெரிக்காவிலும் வாக்குக்கு பணம் தரும் நடைமுறை உள்ளது -அமெரிக்க தூதர்.
தமிழ்நாட்டில் இருந்து யாராவது வேட்பாளரா நின்னு இருப்பாங்க !!
Leave a comment
Upload