தொடர்கள்
வலையங்கம்
நிர்மலா சீதாராமன் சொன்ன உண்மைகள்

2024022917522603.jpeg
இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து நிச்சயம்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி போடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி பேசும்போது பல்வேறு அளவுகோல் சார்ந்த கேள்விகளும் இருக்கின்றன. நீங்கள் இந்த மதத்தை சேர்ந்தவரா நீங்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவரா நீங்கள் இதிலிருந்து வந்தவரா என்றெல்லாம் கேள்விகள் வரும் எனவேதான் நான் தேர்தலில் போட்டி போடவில்லை என்ற யதார்த்த உண்மையை நிர்மலா சீதாராமன் சற்று உரக்க சொல்லி இருக்கிறார் .
நிர்மலா சீதாராமன் சொன்ன முதல் பதில் என்னிடம் பணம் இல்லை அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது. இது 100 சதவீத உண்மை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியலை பார்த்தாலே தெரிகிறது.தேர்தல் என்பது சாமானியனுக்கு இன்று வரை எட்டாக்கனிதான்.அதேபோல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு என்பது ஜாதி மதம் இனம் சார்ந்து தான் இருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா உள்பட எல்லாக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலே சாட்சி அப்படி இருந்தும் என் ஜாதிக்கு முக்கியத்துவம் தரவில்லை என் ஜாதி புறக்கணிப்பு என்ற முணுமுணுப்புகள் இப்போதும் வந்து கொண்டிருக்கிறதுஇது சமூக நீதி பற்றி பேசும் திராவிட கட்சிகளுக்கும் பொருந்தும்.
தேர்தல் அரசியல் என்பது சாமானியனுக்கு என்று சுலபமாக கிடைக்கிறதோ ஜாதி மதம் இனம் என்று பார்க்காமல் என்று வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ அன்றுதான் உண்மையான சமூக நீதி ஜனநாயகம் நமக்கு கிடைத்ததாக பொருள் இதைத்தான் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்