சமீபத்தில் டெல்லியில் ஒரு குடோனில் வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய இருந்த போதைப் பொருட்கள் தயாரிப்புக்கான ரசாயன பொருட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கடத்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களுக்கான மூலப்பொருள் 45 முறை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இந்தக் கடத்தல் வேலையில் முக்கிய பங்கு வகித்தவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலகத் துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரான விடுதலை சிறுத்தை கட்சி மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர். இவர்களை போதைப் பொருள் தடுப்பு போலீஸ் தேடி வருகிறது.
திமுக தற்சமயம் ஜாஃபர் சாதிக்கை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது. போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை இவர் தமிழ் படம் தயாரித்த முதலீடு செய்திருப்பதையும் தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜாஃபர் முதல்வர் உதயநிதி அமைச்சர் சேகர்பாபு டிஜிபி ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஒருவர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவருக்கும் இந்த கடத்தல் வேலையில் சம்மந்தம் என்று முடிவு செய்வது சரியான அணுகுமுறை இல்லை. பிரபலங்களை சந்திக்க ஆயிரம் பேர் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாது.
ஆனால், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஜாஃபர் ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சேர்த்தது சினிமாவில் முதலீடு அவரது வளர்ச்சி இவை எல்லாமே கடந்த மூன்று ஆண்டுகளாக தான். அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான். எனவே இவரின் அசுர வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது யார் என்பதையும் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும். திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் இந்த கடத்தல் பற்றி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. போதைப்பொருள் தடுப்பு விஷயத்தில் நான் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார் இப்போது அதற்கான தருணம் வந்திருக்கிறது என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
Leave a comment
Upload