தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 061 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20231108080936397.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

திருமதி விஜயலட்சுமி

ஸ்ரீ மகா பெரியவாளிடம் அதீத பக்தி கொண்ட விஜயலக்ஷ்மி தனது மாமனார் மற்றும் மாமியாரின் பக்தியை விளக்கும் விதமே நமக்குள் பக்தி பிரவாகத்தை ஏற்படுத்துகிறது.

அந்தக் காலத்தில் ஸ்ரீ பெரியவாளிடம் பக்தி பிரவாகம் பக்தர்களிடையே எப்படியெல்லாம் உருவாகியிருக்கிறது, அதனை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பது தெரியும்.