தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் இதுதான் திராவிட மாடலா?

20231017192754151.jpeg

திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை மழைக்கால நடவடிக்கை என்பது வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மாநகராட்சிப் பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு சாம்பார் சாதம் தருவது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை தான் போர்க்கால நடவடிக்கை என்று பெருமை பேசுகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்த உடன் இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்தது சாலைகளில் தண்ணீர் தேங்காது 4000 கோடியில் திட்டம் முதல்வர் அமைச்சர் மேயர் மூவருமே பெருமையாக 90% நிறைவேறிவிட்டது. நூறு சதவீதம் நிறைவேறிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையில் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருக்கின்றது. சாலை முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போதும் போல் இப்போதும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் .அப்படி என்றால் அந்த 4000 கோடியில் என்ன வேலை செய்தார்கள் என்ற கேள்வி இப்போது எழ தொடங்கி இருக்கிறது. அதிமுகவை கரப்ஷன் கலக்க்ஷன் என்று கிண்டல் செய்தது திமுக இப்போது இதே கேள்வி பூமரங்காக இவர்கள் மீது திரும்பி இருக்கிறது. திராவிட மாடல் என்பது இப்போது கேள்விக்குரிய ஒரு வார்த்தை ஆகிவிட்டது. மக்களை வாட்டி எடுப்பதுதான் திராவிட மாடலா என்ற கேள்வி இப்போது வரத் தொடங்கி இருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் யோசிக்கட்டும்.