தொடர்கள்
வலையங்கம்
வாயை மூடிக் கொள்வது உத்தமம். - வலையங்கம்.

20230301092353378.jpeg

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமதித்துவிட்டார் என்பதற்காக தான் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை 15,000 அபராதம் ராகுல் காந்திக்கு விதித்தது. இந்த வழக்கின் காரணமாகத்தான் அவரது எம்பி பதிவு பறிக்கப்பட்டது. அதன் பிறகும் ராகுல் காந்தி தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை தேவையில்லாமல் சுதந்திரத்திற்காக போராடி சிறையில் அவமதிக்கப்பட்ட சாவார்க்கர் பற்றிய வரலாறை சரிவர தெரிந்து கொள்ளாமல் பொய்யாக புணையப்பட்ட ஒரு கதையை வைத்து அவரைப் போல் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி பேசியதற்கு தனது கண்டனத்தை கடுமையாக தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்திற்கு நிறைய தலைவர்கள் பாடுபட்டு போராடி பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் அதில் சில தலைவர்கள் பற்றி மட்டுமே நாம் முன்னிலைப்படுத்தி பேசுகிறோம் மற்ற தலைவர்களை நாம் பெரிதாக கொண்டாடவில்லை. அதனால் வந்த குழப்பம் தான் சாவர்க்கார் பற்றி ராகுல் காந்தி பேசிய பேச்சு.

அவரது நூற்றாண்டு விழாவுக்கு ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி அம்மையார் எழுதிய வாழ்த்து செய்தி கடிதத்தை படித்திருந்தாலே ராகுல் காந்திக்கு சாவர்க்கர் எப்படிப்பட்ட துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர் என்ற வரலாறு தெரிந்திருக்கும்.

20230301092443127.jpg

இந்திரா காந்தி அந்த கடிதத்தில் நம்முடைய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அடக்கு முறையை எதிர்த்துநின்று போராடிய வீர சாவர்க்கரின் துணிச்சல் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் அருந்தவ புதல்வர்களில் ஒருவர் என்று அந்த கடிதத்தில் சாவர்க்கார் பற்றி இந்திரா காந்தி குறிப்பிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பற்றி மன்னிப்பு கேட்டார் என்று வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி இது அவரது முதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகிறது .வரலாற்றை முழுமையாக படித்து விட்டு பேசுங்கள் அல்லது வாயை மூடிக் கொண்டிருங்கள் அதுதான் உத்தமம்.