தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20230225085504444.jpg

Heading : நல்ல காலம் பொறக்குது.... கி. ரமணி (கொஞ்சம் நீ..ண்ட சிறுகதை)

Comment : ரமணீயமான கதை.. வாழ்த்துக்கள். செங்கோட்டை ஏரியாவில் சாமக் கோடாங்கி மாதிரி இன்னோர் குறி சொல்லும் கூட்டம் உண்டு.. ஒரு பெரிய மணியை காலை நேரத்தில் கொண்டுவந்து ஜோசியம் சொல்வார்கள்.. மணிநாக்கை சுழற்றி அதில்வரும் ஓசை அதிர்வை வைத்து கணிப்பார்கள்.. எனக்கு துல்லியமாக பலித்திருக்கிறது!!!

Dileepan, Chennai

Heading : தேர்வில் மிஸ்ஸான மாணவர்கள் !!

Comment : அதெப்படி,ஆங்கிலம் மற்றும் தமிழ் பரீட்சை பற்றிய விவரங்கள் மட்டுமே விவாதிக்க படுகின்றன. மற்ற பாடங்களுக்கான விவரங்கள்? பார்க்கவன் Reston, USA

Heading : தொழிற்சாலை. - அது ஒரு எழிற்சாலை - ப.ஒப்பிலி

Comment : பாராட்ட வேண்டிய முயற்சி!

Heading : தேர்வு எழுதும் மாணவர்கள் தயாராக ... சூப்பர் டிப்ஸ். ! சத்தியபாமா உப்பிலி

Comment : படித்து புரிந்து கொள்ள (for the learning by the students)ஆசிரியராக, பெற்றவர்களாக என்ன முயற்சிகளை இவர்கள் எடுத்தார்கள்?.அதற்காக செய்ய வேண்டியதை செய்திருந்தால் இந்த நிலை ஒரளவுக்கு தவிர்க்க கூடியதே. பார்க்கவன் Reston USA

Heading : காணாமல் போன கட்சி கட்டுப்பாடு - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் !

Comment : 1.பள்ளிக்கூட நாட்களில் இந்த மாதிரியான சண்டையிட வாய்ப்பு கிடைக்கவில்லை போல. இந்த வயசுல அந்த வழியாக தங்களுடைய ஆசைகளை தீர்த்துக்கட்ட? 2.கண்ணியமான, கட்டுப்பாடான ஏதேனும் ஒரு அரசியல் கட்சி? பார்க்கவன் Reston USA

Heading : தேர்வில் மிஸ்ஸான மாணவர்கள் !!

Comment : பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஆசிரியர்களிடம் நேரடி கள் ஆய்வு நடத்தி, அப்பள்ளி மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, என்னென்ன தீர்வு காணலாம் என்பதை ஆராய்ந்து தேர்வு விகிதத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அரசின் ஆய்வறிக்கை கேலிக்கூத்தாக மாறிவிடும்!

சவுந்தர்யா நாகராஜன், மயிலாடுதுறை

Heading : பட்டாம் பூச்சி பேசுது - 50வது வாரம். நிறைவு வாரம். என்.குமார்

Comment : என்.குமாரின் பட்டாம்பூச்சி பேசுது 50வது தொடரில், கொஞ்சும் குரலில் பட்டாம்பூச்சியாக கூறிய கருத்துக்கள் நெகிழவைத்தது. இதனால் மீண்டும் எப்படி, எந்தவொரு வடிவத்தில் நம்மிடம் வந்து குமார் பேசப்போகிறார் என்ற ஆவலைத் தூண்டியது.

காஞ்சனா, தமிழ்குமரன், பானுமதி, புதுடெல்லி

Heading : மயிலையில் மயக்கிய ஓவியக் கண்காட்சி - வேங்கடகிருஷ்ணன்

Comment : மயிலை நாகேஸ்வரா பூங்காவில் அமைந்திருந்த ஓவியக் கண்காட்சியை நானும் பார்த்தேன். மிகச் சிறப்பு. கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருந்தது. இதை 3 மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளின் ஓவிய ஆர்வத்தை வளர்க்கும்!

வைதேகி பரமேஸ்வரன், திருவான்மியூர்

Heading : ஒரே ஒரு ஸ்டேட்டுல ஒரே ஒரு ஸ்டேஷன் - பாட வைக்கும் மிசோரம். - மாலா ஶ்ரீ

Comment : அடப்பாவமே... உ.பி-யிலயும் குஜராத்லயும் தடுக்கி விழுந்தா, ரயில்வே ஸ்டேஷன் இருக்குன்னும், அங்க யாருமே டிக்கெட் வாங்காம பயணம் செய்றாங்கனு தகவல் சொல்றாங்க. இதுல மெட்ரோ ரயில் வேற!தமிழ்நாடு, ஆந்திரால பல ஊர்கள்ல ஸ்டேஷன் இருந்தும் ஒரே ஒரு பாசஞ்சர் ரயில்தான் நிக்கும். மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம்... கொடுமை!

முனுசாமி, ரத்தினவேல், குமரகுரு, காரைக்குடி

Heading : ஆஸ்கருக்கு பெருமை சேர்த்த குட்டி யானை - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : அனாதைகளாக கொண்டு வரப்பட்ட 2 குட்டி யானைகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வளர்த்த பொம்மன்-பெல்லி தம்பதி, அதை குறும்படமாக படம்பிடித்து ஆஸ்கர் விருது வென்ற கார்த்திக்கி கன்சோல் மற்றும் இந்நிகழ்வை சுவையான கட்டுரையாக வழங்கிய ஸ்வேதா அப்புதாஸ் ஆகியோரை மனதார பாராட்டுகிறோம்.

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன், சென்னை

Heading : தொழிற்சாலை. - அது ஒரு எழிற்சாலை - ப.ஒப்பிலி

Comment : ஓசூர் டிவிஎஸ் மற்றும் சென்னை சிம்சன் தொழிற்சாலை வளாகத்தில் பறவைகள் சரணாலயம் இருப்பதை படித்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தோம். ஓசைப்படாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் இதுபோன்ற ஒருசில நல்லிதயம் கொண்ட தனியார் நிறுவனங்கள் பற்றிய தகவலை வெளிக்கொணர்ந்த ஒப்பிலிக்கு வாழ்த்துக்கள்.

சியாமளா விஸ்வம் , ராயப்பேட்டை

Heading : தேர்வு எழுதும் மாணவர்கள் தயாராக ... சூப்பர் டிப்ஸ். ! சத்தியபாமா உப்பிலி

Comment : மிக பயனுள்ள கட்டுரை. தனியார் பள்ளி துணை முதல்வர் மற்றும் ரம்யாவின் கருத்துகளை அனைத்து பெற்றோரும் பிற தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் படித்து உணரவேண்டும். குறித்த நேரத்தில் பயனுள்ள கட்டுரை வெளியிட்ட சத்தியபாமா ஒப்பிலியின் முயற்சி பாராட்டுக்குரியது.

தனசேகரன், பார்கவி, நூர்ஜஹான், திண்டுக்கல்

Heading : The elephant Whispers. - தி.குலசேகர்

Comment : தமிழில் வெளியான 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பெண் இயக்குநர் கார்த்திக்கி கன்சோல் உள்பட அனைவருக்கும் பாராட்டுகள். இதை குலசேகர் விவரித்த விதம் மிக அருமை!

மாயா, ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : சபையேறும் சங்கீத ஸ்வரங்கள் - மரியா சிவானந்தம்

Comment : 'போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். போகட்டும் கண்ணனுக்கே...' ஆர்ஆர்ஆர் படத்தில் 'நாட்டு நாட்டு' பாடலில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களின் அசாத்திய திறமைக்கு கிடைத்த, நம் இந்திய மண்ணுக்கு கிடைத்த பெருமை, உலகளாவிய 'ஆஸ்கர்' பரிசு என்பதில் பெருமிதம் அடைவோம். மரியா சிவானந்தம் வரிகள் அற்புதம்!

அட்சயா, தர்ஷினி, அஸ்வின், கொல்கத்தா

Heading : கவர்னரின் ஊட்டி விசிட். ! டென்ஷனான உள்ளூர்வாசிகள் - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : இதென்ன கொடுமை... நம்மைப் போல் மற்றவர்களும் மனிதர்கள்தானே என தமிழக ஆளுநர் எண்ண வேண்டாமா? ஆந்திரா, கேரள மாநிலத்தில் மக்களோடு மக்களாகத்தான் ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆளுநர்கள் உனக்கு கொம்பு முளைத்துவிடுமா? இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

திருவேங்கடம், பாஸ்கரன் , திருச்சானூர்

Heading : காணாமல் போன கட்சி கட்டுப்பாடு - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் !

Comment : திருச்சியில் திமுக உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் இடையே, கட்சிக்குள்ளேயே ஏராளமான கோஷ்டி மோதல்கள் நடுத்தெருவிலேயே மக்களின் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. இதில், வாரிசு மோதல் வேறு! இவங்களே அடிச்சுப்பாங்களாம், பின்ன கூடிப்பாங்களாம்... அடி வாங்கினேன், கை உடைஞ்சவன் ஏமாளிகளா!!

திருநாவுக்கரசு, செங்கோடன், திருவிடைமருதூர்

Heading : ஆத்தா நான் பாஸாயிட்டேன்! - தேர்வு பெற்றோர்கள் பார்வையில்.... இராஜலட்சுமி மகாராஜன்.

Comment : ராஜலட்சுமி மகாராஜனின் ஆத்தா, நான் பாஸாயிட்டேன் கட்டுரை, எங்களின் பள்ளிக்கால நிஜ நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்க வைத்தது. இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு கொரோனா, ஆன்லைன் வகுப்பு, ஆல் பாஸ் என்பது மட்டுமே நினைவில் வரும் என்பது மட்டுமே நிஜம்!

தமிழ்செல்வி, ரகுராமன், மீரான், கொடைக்கானல்

Heading : தி.நகரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் - மாலா ஶ்ரீ

Comment : அடடே..‌‌ என்னவொரு வேகம்! வெள்ளியன்று காலை சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்... மறுநாள் காலை நாளிதழ்களுக்கு இணையாக, விகடகவியிலும் கும்பாபிஷேகம் பற்றிய செய்திகளை படங்களுடன் வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள். கங்கிராட்ஸ்!

ராஜசுலோசனா, கிருத்திகா, ராம்கி, அண்ணாநகர்

Heading : தலைவன் வருகிறான்...!-* புதுவை ரா. ரஜனி

Comment : கதையில் சுப்புசாமி தாத்தாவை அசகாய கோமாளித்தனங்களை மிகைப்படுத்தி, அவரை தமிழக பாஜ தலைவர் ஆக்கி, தற்போதைய ஆக்டிங் தலைவரை டம்மி போஸ்ட்டுக்கு மாற்றி, வேறு மாநிலத்துக்கு துரத்தப் பார்க்கிறீர்களா... புதுவை ரஜனி?!

ராமலிங்கம், கார்த்திக் , உடுமலைப்பேட்டை

Heading : பசுவுக்கு சீமந்தம் ஊரெங்கும் கொண்டாட்டம் - மாலா ஶ்ரீ.

Comment : நம்மாளுங்க எதையுமே வித்தியாசமா, விநோதமாதான் செய்வாங்க போலிருக்கே! எனினும் கோசாலை பசுவுக்கு சீமந்தம் நிகழ்வு மிக்க மகிழ்ச்சி.

பரந்தாமன், வைதேகி , பரமக்குடி

Heading : பிளேடு பக்கிரி - தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது. மாலா ஶ்ரீ.

Comment : அடப்பாவமே... ஒரு உயிரை மாய்த்துக் கொள்ள இப்படியா பண்றது? சாதிக்க வேண்டிய வயசில் இப்படி செய்யலாமா? இந்த வேலை இல்லாவிட்டால் வேற வேலை... பிழைக்க வழியில்லையா? 'தமிழ்நாட்டுக்கு போ.‌‌.. கட்சிக் கூட்டங்களுக்கு ஆட்களை அனுப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதி' என யாராவது கூறக்கூடாது?!

ஹர்ஜித்சிங், அமலா ராஜகோபால் , அகமதாபாத்

Heading : வந்தாள் பாரத். - ஒற்றை ஆளாக இரயிலை இயக்கிய முதல் பெண் - மாலா ஶ்ரீ

Comment : வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் லோகோ பைலட் பற்றிய செய்தி மகிழ்ச்சி அடைய வைத்தது. ஒருபக்கம் ஆப்கானிஸ்தானில் இளம்பெண்களை கல்வி கற்கவிடாமல் தீவிரவாதிகள் அட்டூழியம், மறுபக்கம் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்கள்... வினோத உலகமடா சாமீ!

வந்தனா பாலகிருஷ்ணன் , வந்தவாசி

Heading : முட்டை ஓதி வைக்கவா- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : செம்மையான தளம்! அருமையான கதை! ஆர்னிகா நாசர் அவர்களின் படைப்புகளை நான் படித்த வயதைச் சொன்னால் அப்படி நான் சொன்னதைப் படிப்பவர்கள் நம்ப மாட்டார்கள். ஏன், நானே நம்ப மாட்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடைய கதை ஒன்றைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி! சிறப்பான கதை! பிழைதிருத்துநன் எனும் முறையில் எனக்கும் பதிப்புலகில் கொஞ்சம் பட்டறிவு உண்டு. உரிமத்தொகை (royalty) என்கிற சொல்லே இன்று பதிப்புலகில் இல்லை. எழுத்தாளர் காசு கொடுத்தால் எதையும் பதிப்பிக்கிறார்கள். கொடுத்த காசுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிகள் (copies) கொடுத்து விடுகிறார்கள். அதை விற்று எழுத்தாளர் தனக்கான பங்கை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சொல்லப் போனால் இதுவே இன்று பழைய பாணி. இப்பொழுது கேட்பு அச்சு (POD) எனப் புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அதைத் தனிக்கதையாக எழுதலாம். பத்தாண்டுகளாக இணைய உலகில் சுற்றி வருகிறேன். இந்தத் தளத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன். ‘தமிழகக் கோயில்களில் இனி தமிழில் வழிபாடு’ என்பது போன்ற ஆய்வுக்கட்டுரை தரத்திலான எழுத்துக்களையும் வெளியிடுகிறீர்கள்; சோதிடம், சிறுகதை போன்றவையும் வெளியிடுகிறீர்கள். நன்றாக இருக்கிறது! ஆனால் இதழுக்கென ஒரு நிலைப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நடுநிலைமை என்பதே கிடையாது எனச் சொல்லும் வகையைச் சேர்ந்தவன் இல்லை நான். அதே நேரம் கொள்கை என ஒன்று இல்லாமல் வகைதொகையின்றி எல்லாவற்றையும் வெளியிடுவதற்குப் பெயர் நடுநிலைமை இல்லை மையம். மற்றபடி இதழின் உள்ளடக்கம், தோற்றம், இணையத்தள வடிவமைப்பு அனைத்தும் அமர்க்களம்! தொடர்ந்து வருவேன்.

இ.பு.ஞானப்பிரகாசன், சென்னை

Heading : திரையரங்க சினிமா என்னவாகும்... - ஒரு வேதனை ரிப்போர்ட்... - வேங்கடகிருஷ்ணன்

Comment : தளத்தின் வடிவமைப்பு மிக அருமையாக இருப்பதாக முந்தைய கருத்து ஒன்றில் சொல்லியிருந்தேன். அதே நேரம் ஒரு சிறு கூடுதல் கருத்து; வாசிப்பு எழுத்து (body text) மிகவும் பெரியதாகவும் வரிகள் சீராக இல்லாமல் உடைந்து உடைந்தும் காணப்படுகிறது. இதைச் சரி செய்தால் நலமாக இருக்கும்.

இ.பு.ஞானப்பிரகாசன், சென்னை

(இதற்கு தொழில்நுட்பம் தான் காரணம். இயன்ற வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் - ஆ.குழு)