பட்டாம்பூச்சி பேசியது 50 வாரங்கள். இது நிறைவு வாரம்! மனம் நிறைவான வாரம்!
என்னையே பறக்க வைத்த பரவச அனுபவம் இது. ‘குரல் பதிவுத் தொடர்' என்பது இணைய இதழில் புது முயற்சி. சாத்தியமாக்கியது, ‘விகடகவி’. கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு நான் எதிர்பாராதது.
வாரம்தோறும் வார்த்தைகள் தந்த அதிகாலைப் பிரபஞ்சத்திற்கும் - பேசிய என் குரலுக்குக் காரணமான பெற்றோருக்கும் என் உயிர் நன்றி!
(நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, ஆசிரியர் மதன், என்.குமார்)
பட்டாம்பூச்சிக்கு வானம் தந்தது, நான் இரசித்து மதிக்கும் 'விகடகவி' ஆசிரியர், திரு.மதன் அவர்கள். இப்படியொரு முயற்சி வெற்றிக்கு முதல் காரணமான – ஹாங்காங் ராம் அவரது அன்புதான் பட்டாம்பூச்சிக்கு இறக்கை தந்தது.
வாரம்தோறும் வாஞ்சையாக அணுகி, பேசும் பட்டாம்பூச்சிக்குப் பூக்களைக் காட்டியது ராஜேஷ் கண்ணா.
விகடகவி குழுவிற்கும், எழுதும் சக படைப்பாளிகளுக்கும், பாராட்டி வாழ்த்திய... உலக நாடுகள் முழுக்க நிறைந்திருக்கும் தமிழ் வாசக – நேயர்கள் யாவருக்கும் வண்ண வண்ண நன்றிகள்.
... விடைபெறும் முன் வேறென்ன சொல்வது...
நான் எங்கு சென்றாலும் என் மீது மோதி முத்தமிட்டுச் செல்லும் பட்டாம்பூச்சிக்கும்...
உங்களுக்கும் சொல்கிறேன்...
... லவ் யூ!
🦋 என் குமார்
Leave a comment
Upload