தொடர்கள்
பொது
வந்தாள் பாரத். - ஒற்றை ஆளாக இரயிலை இயக்கிய முதல் பெண் - மாலா ஶ்ரீ

20230218093815627.jpg

மகாராஷ்டிர மாநிலம், சதாரா பகுதியை சேர்ந்த பெண் சுரேகா யாதவ். இவர், கடந்த 1988-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார். அதே சமயம், ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றிருக்கிறார். இதற்காக அவருக்கு மத்திய-மாநில அரசுகள் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த வாரம் தேதி சோலாப்பூரில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி பகுதிக்கு ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலை தன்னந்தனியே சுரேகா யாதவ் ஓட்டி வந்து, மற்றொரு சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து சுரேகா யாதவ் கூறுகையில், ‘‘அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் ரயிலை இயக்க, எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.

சோலாப்பூரில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி பகுதிக்கு குறிப்பிட்ட நேரத்தில் 5 நிமிடங்களுக்கு முன்பே வந்தே பாரத் ரயிலை பயணிகளுடன் கொண்டு வந்து சேர்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது!’’ என்று சுரேகா யாதவ் புன்னகையுடன் தெரிவித்தார்.

மும்பையில் அன்று மட்டும் வந்தாள் பாரத்.

மாலாஸ்ரீ