தொடர்கள்
ஆன்மீகம்
அண்ணாமலையார் கோயிலில் சிவதாண்டவம் ஆடிய துருக்கி பெண்! மாலா ஶ்ரீ

20230028005814158.jpg

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த துருக்கி நாட்டையை சேர்ந்த ஒரு பெண், கோயிலின் மூன்றாவது பிரகார மண்டபத்தில் திடீரென பக்திப் பெருக்கில் சிவ தாண்டவம் ஆடத் துவங்கிவிட்டார். அவருடன் சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் உள்ளூர் மக்களும் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சிவனின் பல்வேறு தாண்டவங்களை ஆடிய துருக்கி நாட்டு பெண் மயங்கி விழுந்துவிட்டார்.

அவருக்கு உள்ளூர் மக்கள் தண்ணீர் தெளித்து, உணவு வழங்கி, சக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் வழியனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலா