தொடர்கள்
அனுபவம்
பத்ம விருதுகள் பட்டியல் - மாலா ஶ்ரீ

20230028004658719.jpeg

தமிழகத்தின் 2 பாம்புபிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, மருத்துவம், சமூகசேவை, தொழில்நுட்பம் பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவை புரிபவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’ விருதுகள் வழங்கி வருகின்றன. இதேபோல், 2023-ம் ஆண்டுக்கான ‘பத்ம’ விருது பட்டியலை நேற்றிரவு மத்திய அரசு வெளியிட்டது. இப்பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, மறைந்த முன்னாள் உ.பி முதல்வர் முலாயம்சிங் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வயிற்றுவலியை போக்கும் ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மறைந்த மருத்துவ பேராசிரியர் திலீப் மஹாலனாபிஸ் உள்பட 6 பேருக்கு ‘பத்மவிபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலமாக நாள்தோறும் 5 கோடி உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அதேபோல் தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பிரபல தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி உள்பட 9 பேருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டது.

20230028004719478.jpeg

மேலும், தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான இருளர் இனத்தை சேர்ந்த வடிவேல் சாமி, மாசி சடையன் ஆகிய இருவருக்கும், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் நளினி பார்த்தசாரதி, நடிகை ரவீணா டாண்டன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி உள்பட 91 பேருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்ப்டடு உள்ளன. இவ்விருதுகளை வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

மாலாஸ்ரீ