தொடர்கள்
பொது
வாங்க பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் போவோம் - மாலா ஶ்ரீ

20230021064008490.jpg

எல்லோரும் பெங்களூருவை கொண்டாடும் போது எனக்கு அதன் போக்குவரத்து நெரிசல் தான் வயிற்றில் புளியைக் கரைக்கும்.

இந்த செய்தி கொஞ்சம் ஆறுதல். இருந்தாலும்.... விலை ????

ஓசூர் முதல் பெங்களூர் வரையிலான போக்குவரத்து நெரிசலில் நாம் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை காரை உருட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கும். அப்போது 'ஓசூரிலிருந்து பெங்களூருக்கு ஆகாய மார்க்கமாக பறந்து சென்றால் சீக்கிரம் போயிருக்கலாமே!' என்று நீங்கள் நினைத்தால் இந்த செய்தி உங்களுக்குத் தான்.

பெங்களூர்-ஓசூருக்கு இடையே ஒரு தனியார் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையைத் துவங்க விருக்கிறது. இதன்மூலம் சுமார் 20 நிமிடங்களில் ஓசூர் மற்றும் பெங்களூருக்கு எளிதாகச் செல்லலாம்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட A BLADE India என்ற நிறுவனம்தான், தற்போது இம்முயற்சியை கையில் எடுத்துள்ளது. A BLADE India நிறுவனம் AIRBUS மற்றும் Eve Air Mobility போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, மிகவும் நெரிசலான அல்லது அணுக முடியாத தரைவழிப் பாதைகளுக்கு, குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் போக்குவரத்து மாற்றுகளை உருவாக்கி வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதன்முறையாக மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து புனே, ஷீரடிக்கு இடையே குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் பயண சேவைகளை துவக்கி, வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பின்னர், கர்நாடக மாநிலத்தில் கூர்க், ஹம்பி மற்றும் கபினி மற்றும் கோவாவுக்கு குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் பயண சேவையை விரிவுபடுத்தியது.

"தற்போது பெங்களூர்-ஓசூருக்கு இடையே ஹெலிகாப்டர் பயண சேவை, கடந்த சில நாட்களாக சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 8.45, 10.30 என 2 நேரங்களில் ஹெலிகாப்டர் கிளம்பி, சுமார் 20 நிமிடங்களில் ஓசூரை சென்று அடையும். பின்னர் ஓசூரில் இருந்து மாலை 3.45, 5 என இருமுறை அதே 20 நிமிடங்களில் ஹெலிகாப்டர் பெங்களூரை அடையும்.

அதிகம் பேர் பயன்படுத்த துவங்கினால் இன்னும் நிறைய சர்வீஸ்களை விடுவார்களாக இருக்கும்.

ஒரு ஆளுக்கு ₹6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. ஜஸ்ட் வெறும் 75 டாலர்கள் தான்.

இப்படியே மயிலாப்பூரில் இருந்து, பாரீஸில் இருந்து, வடபழனியிலிருந்து.... ஹெலிகாப்டர் விடுங்கப்பா.... புண்ணியமா போவும்.

சும்மாவா சொன்னார்கள் இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய சொத்து..... நேரம் தான்.

டைம் இஸ் மணி. !!!