இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. 2021 -இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடைசியாக 2011- இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021- இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. 2019- இல் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டது. இப்போது கொரோனா அச்சமெல்லாம் இல்லை. மக்கள் சகஜ வாழ்க்கைக்கு பழகிவிட்டார்கள். இதன் பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் காலதாமதம் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
இதனிடையே பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடங்கி விட்டார்கள். மேலும் சில மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு காண ஆதரவு குரல்கள் வரத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்று சில குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு பக்கம் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற கோஷம் இன்னொரு பக்கம் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு இதுதான் அரசியல் கட்சிகளின் உண்மை முகம். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் திட்டங்கள் சார்ந்தது. அரசின் திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியம். எனவே இனியும் மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் இது மத்திய அரசின் கடமையும் கூட.
Leave a comment
Upload