தொடர்கள்
follow-up
சபாஷ் மேற்குமண்டல காவல்துறை!

20230020161522970.jpg

தமிழ்நாடா? கஞ்சா நாடா ?? - ஒரு கவலை ரிப்போர்ட் என்ற கவர் ஸ்டோரி விகடகவியில் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. அதில்…

தென்மாநிலங்களில் சாராயம் ,கள் போன்ற போதை வஸ்துக்கள் தான் டாப்பில் விற்பனையாகும். தமிழகத்தில் கிட்டதட்ட 90 லட்சம் பேர் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர் என்ற இந்திய சமுக நலதுறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மதுப்பிரியர்களை விட கஞ்சா பிரியர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர் என்ற புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் சந்து பொந்துக்களில் எல்லாம் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. கஞ்சா பீடி, சிகரெட்டுகளில் அடைக்கப்பட்டு படு அமோகமாக வியாபாரம் களை கட்ட தொடங்கிவிட்டது.

தமிழகத்தின் பள்ளி , கல்லூரிகள் அருகே கூட கஞ்சா வியாரிபாரிகள் படு சகஜமாக காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு படிக்கும் இளம் பிஞ்சுகளை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி வியாபாரம் செய்து வருகின்றனர் என்ற விவரமறிந்த காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை சர்வசாதரணமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கடந்த ஓராண்டில் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை தமிழகத்தில் விற்பனை செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் உள்ளனர் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார்.

கஞ்சா வேட்டை 2 என்ற அதிரடி ஆக்ஷனை டிஜிபி சைலேந்திராபாபு நடத்தினர். சென்றாண்டு ஜனவரி முதல் ஜீன் வரையில் தமிழகத்தில் கஞ்சா விற்ற 4035 பேரை காவல்துறையினர் 5235 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா விற்றவர்கள் இடமிருந்து 13,264 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 518 வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளது.இந்த கஞ்சா வேட்டையில் கைப்பற்றபட்ட கஞ்சாவின் மார்க்கெட் மதிப்பு ருபாய் 16.77 கோடி என காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் கஞ்சா என்ற போதை பொருளை ஓழிக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 2022 ஆண்டில் ஆப்ரேஷன் கஞ்சா அல்லது கஞ்சா வேட்டை என்ற திட்டத்தினை துவக்கினார்.

20230020161648761.jpg

தமிழ்நாட்டில் மேற்கு மண்டல போலீஸ் சரகத்தில் அடங்கியுள்ள கோயம்புத்தூர் ,நீலகிரி, திருப்பூர், ஈரோடு,சேலம், நாமக்கல் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்வதையும் அத்தோடு கஞ்சா பயிரிடுவதையும் தடுக்க வேண்டும் என காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர். சுதாகர் தலைமையில் ஒரு டீமை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அமைத்தார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 1992 வருடங்களில் சேலம் பகுதியில் ட்ரையினிங் பிரியடில் உயரதிகாரியாக பணியாற்றி வந்ததால் இங்குள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது முதல் கஞ்சா வரை தடுப்பது என்பது அவருக்கு அத்துப்படி என்பது கூடுதல் சுவாராசியம்.

20230020161732536.jpg

தமிழக டிஜிபி ,தனது அதிரடி ஆக் ஷனில் முதலில் மேற்கு மண்டல் போலீஸ் சரகத்தில் இருந்து 1681 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் முதலில் சென்று பார்த்தது கிராம பஞ்சாய்த்து தலைவர்களை பார்த்து கஞ்சா என்ற போதை பொருளை ஓழிக்க டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகளை பற்றி அவர்களுக்கு பக்குவமாக விளக்கி சொல்லப்பட்டது. இதன் முலம் போதை அரக்கன் கொடுரங்களை ஓவ்வொரு கிராமத்திலும் 18003விழிப்புணர்வு கூட்டங்கள் முலம் அந்தந்த கிராமங்களில் காவல்துறை ஏற்பாடு செய்து நடத்தினர்.

அடுத்ததாக,இந்த பகுதியில் இருந்து கஞ்சா எப்படி வியாபாரத்திற்கு செல்கிறது என்று காவல்துறையினர் வலைவீசி ரகசிய தகவல்களை பெற்றுகொண்டனர்.குறிப்பிட்ட கிராமங்களில் கஞ்சா விற்பவர்களை கிராம தலைவர்களிடம் ஊர் மக்கள் சொல்லி அவர் முலம் காவல்துறையினர் உரிய நபர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கஞ்சா எங்கு விற்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் , மளிகை கடை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் உதவியுடன் கிட்டதட்ட கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மேற்கு மண்டல காவல்துறையினர் 1083 கிராமங்களில் கஞ்சா இல்லாத கிராமங்களாக அறிவித்து காவல்துறையினர் சாதனையில் மணிமகுடமாக திகழ்கிறது.

20230020162250441.jpg

மேற்கு மண்டல போலீஸ் சரகத்தில் ஏற்கனவே 1083 கஞ்சா இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு மீதி இருக்கும் 598 கிராமங்களும் கூடிய விரைவில் கஞ்சா இல்லாத கிராமங்களாக அறிவிக்க அதற்கான பணி பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் முழூ உத்வேகத்துடன் நடத்தி வருகின்றனர் .அத்துடன் ஓவ்வொரு கிராமத்திலும் மீண்டும் எந்தவித போதை பொருட்களும் நுழைய கூடாது என அதற்கான குழு அமைக்கப்பட்டு அதனை கவனிக்க காவல்துறையினர் உதவியுடன் நோடல் ஆபிசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது . காவல்துறை உடை இல்லாமல் சாதாரண மக்கள் போல் தற்போது கஞ்சா இல்லா கிராமங்களில் அவ்வப்போது சென்று பார்க்க வேண்டும் என்ற பணியிலும் காவல்துறையினரை ஈடுபடுத்தியுள்ளேன் என்கிறார் மேற்கு மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர். சுதாகர் .

கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் 68 கல்லூரிகளில் கஞ்சா வியாபாரிகள் குறிவைத்து வியாபாரம் செய்ய அவ்வப்போது முயற்சி செய்வார்கள் என்பதால் இதனை தடுக்க ஆபரேஷன் கஞ்சா 3.0 என்ற பெயரில் கஞ்சா வியாபாரத்தினை தடுக்க குழுக்கள் அந்தந்த கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

கஞ்சா பீடி, கஞ்சா சிகரேட்,கஞ்சா சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் கோயம்புத்தூர் பகுதிக்கு ரெயில்கள் ,ஆம்னி பஸ்கள் முலம் கடத்தி வரப்படுவதாக இங்குள்ள மக்கள் இடையே பேச்சாக உள்ளது.

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்து கைது நடவடிக்கையின் முலம் சிறையில் இருந்து திரும்பிய 120 நபர்களை காவல்துறையினர் அழைத்து வந்து கஞ்சாவின் தீமைகளையும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் கொடுமைகளையும் காவல்துறையினர் உரிய அதிகாரிகள் அறிவுரை வழங்கி , வேறு தொழில் செய்ய உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.இதனால் இந்த 120 கஞ்சா வியாபாரம் செய்துவந்த நபர்கள் வேறு தொழிலுக்கு செல்ல காவல்துறையினர் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தோம் என்கிறார் மேற்கு மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர். சுதாகர் .

தமிழக காவல்துறையை புதிய மிடுக்குடன் செயல்பட வைத்திருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு ,மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை பயன்படுத்தி கஞ்சா ஓழித்து கஞ்சா இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்பது தமிழக மக்களின் குரலாக உள்ளது.