தொடர்கள்
அரசியல்
ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ததிகிணத்தோம். - பால்கி

பொறுப்புத்துறப்பு:[போன வாரத்திலிருந்து கோவாவிலிருந்தே தொடர்கிறது]

நான் இதை எழுதுகையில் இருந்த ராஜஸ்தான் காங்கிரஸின் நிலைமையை எடுத்துரைக்கிறேன்.

இதை நீங்கள் படிக்கையில் நிலமை உல்ட்டா வா போயியும் இருக்கலாம். போகாமலும் இருக்கலாம். அதற்கு அவர்களும் பொறுப்பல்ல நானும் பொறுப்பல்ல. ஏன்? யாருமே பொறுப்பல்ல.

என்னடா இவன் இன்னும் கேவியட் போட்டு எழுதறான்னு பாக்கறீங்களா? அங்கு நடக்கும் அரசியல் அப்பிடி. இங்க கோவா மாறி இல்ல. காங்கிஸுக்குள்ளே கெஹ்லொட் கோஷ்டி பைலட் கோஷ்டி ரத்தபாசம் காட்டிக்காம கடுமையான சண்டை போடறாங்க.

காங்கிரஸ் கட்சி த்ரோகியை என்னிக்கும் முதல்வராக அனுமதிக்கமுடியாது. வேண்டும் என்றால் தெருவில் இறங்கி ரத்தம் சிந்தத் தயார் எங்கிறார்கள் கெஹ்லொட் கோஷ்டி. அப்பிடி ஒரு பாசம் கொண்டு இரு கோஷ்டிகளும் சேர்ந்து எப்படி இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்திருக்காங்க. இருக்காங்க. இவர்களுக்கு எதிர்கட்சியே வேண்டாம். உள்ளுக்குள்ளேயே இருக்கு. பாவம் மக்கள். வெதும்பி போயிருப்பாங்க.

இவ்ளோ பீடிகை போட்டு இன்னிக்கி அன்னன்னிக்கி நடந்ததச் சொல்லப்போறேன்.

24 செப்டம்பர் 2022 அன்று, ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராவதற்கு வரவிருக்கும் தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்தார். ஒருவர் ஒரு பதவி என்ற கொள்கை பலமாக பேசப்படவே, மூத்த காங்கிரஸ் தலைமைக்கு தமக்குப் பின் முதல்வர் பதவிக்கு C. P. ஜோஷியின் பெயரை கெஹ்லோட் பரிந்துரைத்தார். இந்த ஒருவருக்கு ஒரு பதவி அவரை திக்கு முக்காட வைத்து விட்டது. கட்சியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் இருந்திடலாம் என்ற ஆசைக்கும் மண் விழுந்தது.

20220830230300717.jpg

நவராத்ரி பூஜையில் அஷோக் கெஹ்லோட்.

அவரது விருப்பத்தைத் தொடர்ந்து, 'ஒரு நபர், ஒரு பதவி' என்ற முடிவை கட்சி தெளிவுபடுத்தியதால், கெஹ்லோட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கெலாட்டுக்குப் பதிலாக, மூத்த காங்கிரஸ் தலைவர்களான அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க முடிவு செய்தனர். ஆனால் அசோக் கெஹ்லோட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அந்த முடிவை ஆதரிக்கத் தயாராக இல்லை, மேலும் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

20220830225936852.jpg

யார் யாருக்கு காண்பிக்கிறார்கள்? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

25 செப்டம்பர் 2022 அன்று, இரவு 9 மணியளவில், கிட்டத்தட்ட 82 எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டப் பேரவையின் சபாநாயகர் சி.பி. ஜோஷியின் இல்லத்தை அடைந்து தங்கள் ராஜினாமாவைச் சமர்ப்பித்தனர். இருப்பினும், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதேபோன்ற நெருக்கடி, ஜூலை 2020 இல் நடந்தது, இதில் சச்சின் பைலட் ராஜஸ்தானின் துணை முதல்வர், ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தலையீட்டால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ராஜினாமாவைத் தொடர்ந்து, நள்ளிரவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை டெல்லிக்குத் திரும்பி நிலைமையைச் சமாளிக்கும்படி உத்தரவிட்டார்

மூன்றாவது கெஹ்லாட் அமைச்சரவையின் பதவிக் காலத்தில் இது இரண்டாவது முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் அரசாங்க நெருக்கடியைத் காண்கிறது.

26 செப்டம்பர் 2022 அன்று சோனியா காந்தியின் இல்லத்தில் மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. மறுபுறம், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், ராஜஸ்தான், சதீஷ் பூனியா, "காங்கிரஸ், 'பாரத் ஜோடோ யாத்ரா' செய்வதற்கு முன் 'காங்கிரஸ் ஜோடோ யாத்ரா' செய்ய வேண்டும்" என்று கூறினார்.சோனியா காந்தியின் சந்திப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டார்.

பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் அரசியல் நெருக்கடியில் அசோக் கெஹ்லோட் பிரிவு எம்எல்ஏ சாந்தி குமார் தரிவால் முக்கிய பங்கு வகித்ததாக கருதினர். கெஹ்லோட் மற்றும் பைலட் இருவரும் நெருக்கடி குறித்து மௌனமாக இருந்தும், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வழங்கவில்லை. 29 செப்டம்பர் 2022 அன்று, சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், ராஜஸ்தான் முதல்வராகத் தொடர்வது என்றும் கெஹ்லோட் முடிவெடுத்தார். இருப்பினும், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி குறித்து கட்சி 2 நாட்களுக்குள் முடிவெடுக்கும் என அக்கட்சியின் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஒரு சஸ்பென்சை வைத்தார். இப்போது வரை 1 நாள் கழிந்து விட்டது. நாளை என்ன ஆகுமோ என்று தலைமைக்குத் தெரியாது. எப்படியாவது, தானாகவே தீராதா என்ற நிலையில் அவர்கள்.

இந்த நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுவது :

தலைமை மாநிலத்தின் உட்பூசலை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டது. கெஹ்லோட் மற்றும் பைலட் இடையேயான உறவு, தலைவர்களுக்கிடையேயான வழக்கமான அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, கசப்பானதாக மாறியது, மேலும் தேசியத் தலைமை அந்த பதட்டங்களைத் தணிக்க சிறிதும் முயற்சி செய்யவில்லை.

தலைமைக்கு அடங்கா மாநில எம் எல் ஏக்கள்.

கெஹ்லோட் மற்றும் அவரின் எம் எல் ஏக்களின் கட்டுபாடற்ற தன்மை தலமை அனுப்பிய தூதுவர்களை திகைக்க வைத்தது மட்டுமில்லாது கட்டுப் படுத்தமுடியாத நிலைக்கும் தள்ளியது என்பதும் வெட்ட வெளிச்சமாக்கியது.

வந்த டில்லி தூதுவர்களுக்கு பைலட்டின் எம் எல் ஏக்களின் அடமண்ட் தன்மையும் அதிர்ச்சி அளித்தது.

இதனால் கெஹ்லோட் தலைமையின் நம்பிக்கையை இழந்தார்.

சோனியா வார்த்தை ஒரு வாத்தியார் பிரம்பாய் பார்த்த நிலைமை இன்று ஒருவரும் அதை சட்டை செய்யவும் இல்லாது போனது வெளிச்சத்திற்கு வந்தது.

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: 'ஒரு துரோகியை முதல்வராக விட இடைக்கால தேர்தல்கள் சிறந்தது..கெலாட் எம்எல்ஏக்கள்.

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியின் சிறப்பம்சங்கள்: காங்கிரசுக்கு யார் உயர் மட்ட கட்டளையாளர் என்பது தெளிவாயில்லை

காந்தி குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத ஒரு காலத்தில் காங்கிரஸ் இப்போது நுழைந்திருக்கிறதா? நரசிம்மராவ் 1998ல் கணித்தபடி - கட்சியில் குடும்ப ஆதிக்கம் செலுத்தும் காலம் குறைந்து செல்லும் என்ற நிலை வருகிறதா?

ராஜஸ்தான் நெருக்கடியின் மற்றொரு சிறப்பம்சமாக கெஹ்லோட்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்ற முடிவு தலைமை ஏற்றுக்கொண்டது என்றும், ஆனால் கடந்த வார மாநிலத்தின் நெருக்கடிக்குத் தான் பொறுப்பேற்பதாகவும் அதற்காக டில்லி தூதுவர்கள் குறிப்பிட்ட 3 அசோக் கெலாட் விசுவாசிகளுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்ற ஸ்கீமுடன் கெஹ்லோட் ஜெய்ப்பூர் திரும்பினார். அதே சமயம் பைலட்டை மேலிடம் தன்னை வந்து பார்க்கும்படியும் சொல்லியது. முன்னமே சொன்னது போலே, இன்னும் ஒரு நாளில் மாநிலத்தின் முதல்வர் அறிவிக்கப்படும் என்ற சஸ்பென்ஸ் அனைவரையும் தவிக்க வைக்கிறது போலத் தோன்றினாலும், இரு கோஷ்டிகளும் தத்தம் யுக்திகளுடன் தயாராக உள்ளனர் என்றே தோன்றுகிறது.

கெஹ்லோட் கட்சி எம் எல் ஏக்கள் கட்சி த்ரோகியை முதல்வராக்குவதற்கு தங்கள் இஸைவு இல்லை, மாறாய், இடைத்தேர்தலுக்கு தயார் என்று அறிவித்தும் விட்டார்கள்.

இதற்கிடையில் அசோக் கெஹ்லோட் முதலமைச்சராக நீடிப்பாரா என்பதில் காங்கிரஸ் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், ராஜஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளை பாரதிய ஜனதா கட்சி (BJP) உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான உறுதிமொழியை காங்கிரஸ் தலைமை நிறைவேற்றும் என நம்புவதாக பைலட் முகாம் எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களிடம் 26 எம் எல் ஏக்களே உள்ளனர். வெளியே வந்தால் கட்சி தாவல் சட்டத்தில் ஜீரோவாகிவிடுவார்கள். இங்கு தான் பா ஜ க என்ன வியூகம் வகித்திருக்கிறது என்று கவனிக்க வேண்டும்.

அங்கு தலைவர் பாரத் ஜோடோ யாத்திரைக்கு பதிலாய், காங்கிரஸ் ஜோடோ யாத்திரைக்கு போயிருக்கவேண்டும் என்று டீவீ சானால்களில் அலரல் பலமாய் கேட்கின்றன.

20220830230937661.jpg

நாளை யாருக்கு நல்லதாக விடியுமோ? இரு கோஷ்டிகளும் இவ்விதமே இசைவுடன் இருப்பர்களா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.