ஏன் இன்னும் தயக்கம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமான அரசியல் தலைவர் தான் சொல்ல நினைப்பதை வெளிப்படையாக எப்போதும் பேசுவார். அவரும் ஊழலுக்கு எதிராக ஒருகாலத்தில் பேசியவர்தான் இனிமேல் அவரும் ஊழல் பற்றி பேச முடியுமா என்பது சந்தேகம்தான். அவரது அமைச்சரவையில் இருந்த பார்த்தா சட்டர்ஜி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான ஒரு நடிகையின் வீட்டில் அமலாக்கத்துறை 50 கோடி ரூபாய் ரொக்கம் 5 கிலோ தங்கம் கைப்பற்றியிருக்கிறது. இதுபோன்ற மத்திய அரசு நடவடிக்கையின் போது பாரதிய ஜனதா மீது எரிச்சல் காட்டும் மம்தா பானர்ஜிசட்டம் தன் கடமையை செய்யட்டும்என்று அடக்கமாக பதில் சொல்லி இருக்கிறார். கூடவே அமைச்சரை கட்சிப் பதவியிலிருந்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்.
அதேசமயம் அமைச்சர் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் முறைகேடு செய்து இந்தப் பணத்தையும் தங்கத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார் என்பது தான் கொடுமை. அமலாக்கத்துறை குற்றச்சாட்டின் படி இந்த முறைகேடுகள் உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் உண்மையை மறைக்க பார்க்கிறீர்கள் அல்லது முதல்வர் பதவிக்கு நீங்கள் தகுதி இல்லாதவர் என்று அர்த்தமாகி விடும்.
ஆனால் இந்த நிமிடம் வரை நீங்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை. உங்கள் மௌனம் இந்த ஊழலுக்கு நீங்களும் உடந்தை என்பதுதான் பதில். அப்படியிருக்கும் போது நீங்களும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா? ஏன் இந்த தயக்கம் ??
Leave a comment
Upload