தொடர்கள்
அரசியல்
வேண்டாம் பன்னீர்செல்வம் -பொதுக்குழு கிளைமாக்ஸ்- விகடகவியார் ரிப்போர்ட்

2022052415383051.jpg

சென்ற மாதம் வரை அதிமுகவின் பெரும்பாலும் நிர்வாகிகள் சசிகலா வேண்டாம் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பொதுக் குழுவில் ஓபிஎஸ் வேண்டாம் என்ற புது கோஷம் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பொதுக்குழு மேடையில் பேசியவர்கள் யாரும் ஓபிஎஸ் பெயரை உச்சரிக்கவே இல்லை எடப்பாடி எடப்பாடி என்று அவரது புகழைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

.பன்னீர்செல்வம் பொதுக்குழு பதினோரு மணிக்கு துவங்க இருந்தது. பத்தரை மணிக்கே வந்து விட்டார். அவர் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் அப்போது எடப்பாடி வரவில்லை காரணம் பன்னீர்செல்வத்தை சம்பிரதாயத்துக்கு எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்பதால் அந்த நிகழ்வை தவிர்க்க ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார்.அதற்கு வரும் வழியில் கூட்ட நெரிசல் காரணமென்று சொன்னார்கள். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை விட்டுப் புறப்பட்டது முதல் பொதுக்குழுவை மண்டபத்தை நெருங்கும் வரை வழியில் கூடியிருந்த தொண்டர்கள் எடப்பாடி வாழ்க என்ற கோஷம் தான் தொடர்ந்து முழங்கி கொண்டிருந்தார்கள் சில இடங்களில் பி எஸ் ஒழிக என்று கோஷம் சத்தமாக கேட்டது.

20220524154012879.jpg

பொதுக்குழு மேடையில் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது அவருக்கு யாரும் வணக்கம் கூட சொல்லவில்லை எழுந்து நிற்கவில்லை பன்னீர்செல்வம் முகத்தை எடப்பாடி திரும்பி கூட பார்க்கவில்லை. பொதுக்குழு கூட்டத்தை இடைக்கால அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையேற்று நடத்தித் தர வேண்டும் என்று முன்மொழிய வைகை செல்வன் மைக் மூலம் பன்னீர்செல்வத்தை அழைத்தார். .பன்னீர்செல்வம் மைக் முன் வந்தது தாற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமை தாங்கி பொதுக்குழுவை நடத்த நான் முன்மொழிகிறேன் என்றார் அதைத்தொடர்ந்து எடப்பாடி எழுந்து வந்து அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தது வழிமொழிகிறேன் என்றார்.

20220524154054870.jpg

ஆனால் மேடையில் அதன்பிறகு பேசியவர்கள் யாரும் பன்னீர்செல்வம் பெயரை உச்சரிக்கவே இல்லை. தீர்மானங்களை வைகை செல்வன் வாசிக்கத் தொடங்கிய போது ஆவேசமாக மைக் முன் வந்த முன்னால் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியமான சி.வி.சண்முகம் இந்த இருபத்திமூன்று தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது நிராகரிக்கிறது நிராகரிக்கிறது என்று மூன்று முறை அங்கு கூடியிருந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்வது போல் அதாவது சி.வி.சண்முகம் நிராகரித்ததை ஏற்றுக்கொள்வது போல் தீர்மானம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று குரல் கொடுத்தார்கள் எனவே தீர்மானத்தை வைகை செல்வன் வாசிக்கவே இல்லை.அதன் பிறகு ஆவேசமாக மைக் பிடித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இந்த அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு ஏற்கவில்லை நிராகரித்து விட்டது தொண்டர்களில் ஒரே தீர்மானம் ஒற்றை தலைமை என்பதுதான் அந்த ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்ந்து அடுத்து தலைமைக் கழகம் எப்போது பொதுக்குழுவை கூட்டுகிறதோ அப்போது ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்ந்து இந்த தீர்மானங்கள் நிறைவேற்றி தரப்படும் என்றார். இவை எல்லாவற்றையும் எடப்பாடி ஓபிஎஸ் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு தற்காலிகத் தலைவராக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற அறிவிப்பை வைகைச்செல்வன் சொல்ல அதை ஆமோதித்து பொதுக்குழு ஏற்றுக்கொண்டதாக ஜெயக்குமார் அறிவித்தார்

தன்னை நிரந்தர அவைத்தலைவராக நியமித்ததற்கு நன்றி சொல்ல மைக் முன் வந்தது தமிழ் உசேன் நின்று சில நிமிடம் பேசினார். உடனே அங்கே வந்த முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம் மைக்கை பிடித்து இரட்டை தலைமை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து மனு தந்திருக்கிறார்கள். எனவே இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அடுத்த பொதுக்குழு தேதியை இப்போதே இந்த மேடையில் உடனே அறிவிக்க வேண்டும் என்று சொல்லி அந்த மனுவை தமிழ்மகன் உசேன் இடம் கொடுத்தார். சி.வி.சண்முகம். இதைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழு 11.7.2022 அன்று கூடும் அப்போது ஒற்றை தலைமை தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

20220524154208632.jpg

உடனே ஆவேசமாக எழுந்த .பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் இருவரும் ஏதோ சத்தமாக பேச மைக் முன் வந்த வைத்திலிங்கம் இந்தப் பொதுக்குழு செல்லாது சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். வைத்திலிங்கம் வெளியே வரும்போது ஓபிஎஸ் எதிர்த்து ஒழிக கோஷம் தொடர்ந்து ஒலித்தது. அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது பேப்பரை எல்லாம் அவர் மீது வீசி எறிந்தார்கள் மொத்தத்தில் ஓபிஎஸ் அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்ற அளவுக்கு அவரது நிலைமை மாறிவிட்டது.

20220524154309409.jpg

ஆனால் இதுபற்றியெல்லாம் தெரிந்ததாக கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் தமிழக பாரதிய ஜனதா அண்ணாமலை தமிழக பாரதிய ஜனதா மேலிடப் பொறுப்பாளர் சி .டி.ரவி இருவரும் எடப்பாடியை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

20220524154342232.jpg

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் வீட்டுக்கும் சென்று அவரிடமும் ஆதரவு கேட்டார்கள் அதன் பிறகு உட்கட்சி அரசியல் பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் சம்பிரதாயமாக சில நிமிஷம் மட்டும் பேசிவிட்டு புறப்பட்டு விட்டார்கள்.

20220524154505664.jpg

நிருபர்களிடம் ஓ பி எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் இந்தப் பொதுக்குழு செல்லாது என்று சொல்லியிருக்கிறார் இதனைத் தொடர்ந்து ஓ பி எஸ் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் மூவரும் டெல்லிக்குப் மாலை புறப்பட்டு விட்டார்கள். நாளை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்கிறார் அந்த வேட்பு மனுத் தாக்கலில் கையெழுத்துபோட ஓ பி எஸ் சென்றிருக்கிறார் என்கிறார்கள் ஆனால் பொதுக்குழுவை எதிர்த்து தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றம் என்று போய் கட்சி சின்னம் முடக்கும் வேலை செய்ய இருக்கிறார் ஓபிஎஸ் என்றும் சொல்கிறார்கள் ஆனால் எது எப்படியோ கட்சித் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் இது தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்துக்கு தெரியாதா என்ன என்கிறது எடப்பாடி தரப்பு. இனி அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளை அதிமுகவின் பார்க்கலாம்.