தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20220524153315241.jpeg

தமிழ் வாழ்க கோஷம் மட்டும் போதாது.

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர் ஒருவர் தான். பத்தாம் வகுப்பில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினார்கள். பன்னிரண்டாம் வகுப்பிலும் 8 லட்சத்திற்கு அதிகமானோர் தேர்வு எழுதினார்கள். ஆனால் நூற்றுக்கு நூறு தமிழ் பாடத்தில் வாங்கியவர்கள் இருவர் தான். பத்தாம் வகுப்பு தேர்வில் தாய்மொழியான தமிழில் 47ஆயிரம் பேர்கள் தேர்ச்சி பெறவில்லை. இது பற்றி ஒரு ஆசிரியை ஒரு பத்திரிகை பேட்டியில் அவர்களால் குறைந்தபட்சம் தமிழில் எழுதப் படிக்கவே தெரியவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

இதற்குக் காரணம் என்ன 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி என்பது அந்தப் பள்ளி முடிவு செய்வதுதான். ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் ரொம்ப ஆண்டுகளாக அமுலில் இருந்து வருகிறது. தற்போது சில ஆண்டுகளாக அது ஒன்பதாம் வகுப்பு வரை அமுலுக்கு வந்து விட்டது. தவிர நாம் ஆங்கில மோகத்தில் ஆங்கில வழிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சதவீதம் அதிகம் என்பதும் ஒரு உதாரணம். ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் தமிழுக்கு உரிய கௌரவம் கிடைப்பதில்லை. தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கிய இரண்டு மாணவிகளும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் அல்ல தனியார் பள்ளியில் பயின்றவர்கள் தமிழுக்காக போராடுவதாக சொல்லும்.

அரசாங்கம் நடத்தும் பள்ளியில் தமிழின் உண்மை நிலை இதுதான். இந்தி ஒழிக என்று இந்தி திணிப்பை எதிர்த்து போராடும் நாம் மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற நிலைக்கு பள்ளிகள் தள்ளப்பட்டது பற்றி கவலைப்படவில்லை போல் தெரிகிறது.

தமிழ் வாழ்க என்ற கோஷம் மட்டும் போதாது அது வாழ அது பழக. அது பரவ அது வளர நாம் என்ன செய்தோம் செய்கிறோம் செய்யப்போகிறோம் என்று யோசிப்போம்.