தொடர்கள்
நெகிழ்ச்சி
"கிராமமே பராமரிக்கும் துபாய் ஸ்டைல் பஸ் ஷெல்டர் "--ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டியில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலார் கிராமம் .

20220522232050327.jpg
இந்த கிராமத்தை தாண்டி தான் தாய் சோலை மஞ்சூர் என்று நீலகிரியின் கடை கோடி கிராமமான கிண்ணக்கொரைக்கு செல்லும் பாதை .இத்தலார் கிராமத்தில் தினமும் காலை முதல் மாலை வரை பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்பது வழக்கம் .

20220522232232250.jpg
அதிலும் பள்ளி குழந்தைகள் பேருந்துக்கு நிற்க நிழல் கூடாரம் இல்லாமல் இருந்தது .
கடந்த வருடம் கொரோனா சமையத்தில் இந்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பஸ் ஷெல்டர் அமைக்க முயற்ச்சி எடுத்ததின் விளைவு இன்று துபாய் ஸ்டைலில் ஒரு சூப்பர் பஸ் ஷெல்டரை அமைத்து கிராமத்து பயணிகளுக்கு மழை , வெயிலில் இருந்து பாதுகாப்பை கொடுத்துள்ளனர் இந்த கிராமத்து மக்கள் என்பது ஆச்சிரியமான ஒன்று தான் .

20220522232348625.jpg
இந்த பஸ் ஷெல்டர் மக்களுக்கு பல விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வாசகங்கள் பளிச் என்று காட்சி அளிக்கிறது .

20220522232750736.jpg
போக்குவரத்து சிக்னல் , பேருந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் , சாலை பாதுகாப்பு , புகை பிடிக்க கூடாது அது உடல் நலத்திற்கு கேடு போன்ற வாசகங்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது .

" நீலகிரி படுக இன மக்களின் படுக மொழியில் வரவேற்பு வாசகத்தை பொறித்துள்ளனர் " நங்க ஒள்ளித்தாலே நாடு ஒள் ளித்து " அதாவது நாம் ஒளிர்வு பெற்றாலே நாடும் ஒளிரும் .இந்த வாசகத்தின் படி தான் இந்த பஸ் ஷெல்டர் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது .


கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு மூன்று லட்சம் திரட்டி இந்த அழகிய பஸ் ஷெல்டர்ரை உருவாக்கியது தான் மிக சிறப்பான ஒன்று .அதிலும் இவர்கள் தினமும் பராமரிப்பது தான் இவர்களின் சிறப்பான விஷயம் .

20220522232910799.jpg
இந்த பஸ் ஷெல்டர் அமைக்க முக்கிய பங்கு வகித்த கவாஸ்கர் என்ற இளைஞர் கூறும் போது , " மழையிலும் வெயிலிலும் தினமும் மக்கள் பஸ்சுக்காக காத்து நிற்பதை பார்த்து ஊர் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஆக்கப்பூர்வமான முடிவை எடுத்து எங்க கிராம மக்களின் உதவியால் நிதி திரட்டி இந்த நவின பஸ் ஷெல்டரை அமைத்தோம் .இதனுள் இருக்கைகள் உண்டு .வெயில் சமையத்தில் உள்ளே கூலாக இருக்கும் .குளிர் சமையத்தில் இதமான சூடு இதனுள் இருக்கிறது .

20220522233056909.jpg
தினமும் காலை 6 மணிக்கு திறந்து விடுவோம் இரவு 8.30 மணிக்கு பூட்டி விடுவோம் .தினமும் எங்க இளைஞர் குழு சுத்தம் செய்யும் வேலையையும் செய்து வருகிறோம் . சில பெண்கள் பெரியவர்கள் இந்த பக்கம் வரும் போது சற்று ஒய்வு எடுத்து செல்லவும் இந்த ஷெல்டர் உதவுகிறது , இன்னும் பல ஆக்கபூர்வமான செயல்களை உருவாக்குகிறோம் அதன் பணிகள் துவக்க பட்டுவிட்டன ஒரு விஷயம் நாங்கள் அரசின் உதவியை எதிர் பார்த்து காத்திருக்க வில்லை " என்று முடித்தார் .

20220522234146387.jpg
அந்த அழகிய கிராமத்து பஸ் ஷெல்டரில் நாமும் சற்று அமர்ந்து ரசித்து விட்டு வந்தோம் .