தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220518103841570.jpeg

Heading : ஒரு மரத்தின் கதை -சத்யபாமா ஒப்பிலி

Comment : ஒரு மரத்தின் கதை என்ற தலைப்பில் சத்யபாமா ஒப்பிலி கலக்கிவிட்டார். அதிலும் மரத்தைப் பார்த்து, 'என்ன பாக்கற! எதோ இந்த பொண்ணுக்கு தைரியம் சொல்லனும்னு தோணிச்சு. அதனாலே இட்டு கட்டி ஒரு கதைய சொன்னேன். எத்தனையோ கதைக்கு நடுவுல ஒரு பொய் கதை. இருந்துட்டு போகட்டும். பத்திரமா வைச்சுக்கோ!' என்ற சிவகாமியின் வார்த்தைகள் செய் டச்சிங்!

ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை

Heading : ஒற்றை தலைமை நோக்கி அதிமுக? !! - விகடகவியார்

Comment : அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் தொடர்பான அரசியல் பின்னணி தகவல்கள் கரெக்ட்தான். 23ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடந்த களேபரங்கள், அக்கட்சியின் மானத்தை சந்தி சிரிக்க வைத்துவிட்டது. இது கட்சியை துவக்கி சிறப்பாக நடத்தி மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

சுகுமாரன், கோவிந்தசாமி, பூந்தமல்லி

Heading : புதிய குடிமகனா? குடிமகளா? மாறும் அரசியல் வானிலை-ஜாசன்

Comment : கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஒடிசாவின் பழங்குடி தலைவரும் முன்னாள் கவர்னருமான திரௌபதி முர்மு ஆகியோர் பாஜ சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக பெயர் அடிபடுகிறது என்ற ஜாசனின் அரசியல் ஆரூடம் பலித்துவிட்டது. பாஜ சார்பில் திரவுபதி முர்மூ வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். கில்லாடி நீர்!

ரேணுகா ஹரி, அண்ணாநகர்

Heading : யௌவன வரி எழுத்து விஞ்ஞானி- ஆர்னிகா நாசர்

Comment : யௌவன வரி கட்ட மறுத்து அழகான பூமி மக்கள் தங்கள் மூக்கு நுனியை கத்தரித்தனர். யௌவனவரி விதிப்பு நிறுத்தப்பட்டது. மக்கள் ‘வரி கொடுக்க மாட்டோம் போடா!” கோஷம் மிகைத்தது என்ற ஆர்னிகா நாசரின் வரிகள் மத்திய-மாநில அரசுகளின் அநியாய வரிவிதிப்ப்புக்கு சரியான பாடம்!

மாயா குப்புசாமி, வடபழனி

Heading : அறமே தெய்வம்! பா.அய்யாசாமி

Comment : அன்பே தெய்வம் சிறுகதை மூலமாக சாதி பாகுபாடுகளுக்கு, அவர்களின் வழிபாடு முறைகளுக்கு அய்யாசாமி சவுக்கடி கொடுத்திருக்கிறார். சபாஷ்!

சௌம்யா சுரேஷ், மடிப்பாக்கம்

Heading : ஒரு மரத்தின் கதை -சத்யபாமா ஒப்பிலி

Comment : cute story. நல்ல நடை. வாழ்த்துக்கள்!! ரமணி

Heading : பிரிந்தார் போகேஸ்வரா !! ஆசிய வன சோகம்.! - ஸ்வேதா அப்புதாஸ் . -

Comment : போகேஸ்வர் யானையின் இறப்பு நெஞ்சை கலங்க வைத்தது. இனி வரும் நாட்களில் வனப் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் கூட நமக்கு சொந்தமானதல்ல ,அது மிருகங்களின் வீடு என்று அவற்றை வணங்கிப் பாதுகாப்பது மட்டுமே போகேஷ்வர் போன்ற ஜீவராசிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்ற வரிகள் நிஜம்!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : வலையங்கம்

Comment : ஒரு பக்கம் ஜாதி ஒழிப்பு, மதசார்பின்மை பற்றி பெருமை பேச்சு. மறுபக்கம் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு எனும் அரசியல் கட்சிகளின் கோரமுகம் இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தெரிகிறது. எது எப்படியோ, அதிகாரமில்லாத அலங்காரப் பதவி என்பதைத்தான் துக்ளக்கின் அட்டைப்படம் தெளிவுபடுத்துகிறது. கூடவே, இதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி என்று கூறிய விதம் விகடகவி வலையங்க வரிகள் செய் நக்கல்!

ராமகிருஷ்ணன், பலராமன் , பாளையங்கோட்டை

Heading : ஒரு மரத்தின் கதை -சத்யபாமா ஒப்பிலி

Comment : அருமையான கதை. மனோதத்துவ முறையில் எழுதப்பட்டுள்ளது. நல்ல தமிழ் நடை .வாழ்த்துக்கள்