எண்பது வயதை கொண்டாடிய ராக தேவன் இசைஞானியைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் நினைவில் வரும் எண்பது தகவல்கள்.
1. இயற்பெயர் ஞானதேசிகன் என்கிறார்கள். பள்ளியில் சேரும்போது ராஜய்யா
2. ஆனால், அன்போடு வாஞ்சையாய் ராசையா என்றே அழைக்கப்பட்டார்
3. தந்தை பெயர் பிரபல்யமாக அறியப்படவில்லை . தாயார் பெயர் சின்னத்தாயி
4. மூத்த சகோதரன் மேல் அலாதி பக்தி, மரியாதை. பாவலர் வரதராஜன்.
5. இளைய சகோதரன் அமர். பின்னாளில் கங்கை அமரனாக அழைக்கப்பட்டார்.
6. ஆர்மோனியம் வாசிக்கும் ஆள் வராததால் தவித்த பாவலருக்கு, தம்பிய கூட்டிட்டு போப்பா என்று அம்மா சொல்ல ராஜா சார் மேடையேறிய பொழுது , ரொம்ப சின்ன வயசு.
7. பெண் குரலில் மேடையில் பாடி, அந்த சின்ன வயதில் கரகோஷம் வாங்கிய நாட்கள் அதிகம் உண்டு.
8. 1968 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த பொழுது அவருக்கு வயது 25.
9. தன்ராஜ் மாஸ்டரிடம் கிடாரும் , பியானோவும் கற்றுக்கொண்டார்.
10.முதல் படம் அன்னக்கிளி ரிலீஸ் ஆன வருஷம் 1976.
11. ராஜா என்ற பெயரில் வேண்டாம், AM ராஜா என்ற பெயர் ஏற்கெனவே இருக்கு ,
ஆகவே , இளையராஜா என்று நாமகரணம் சூட்டியவர், அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம்.
12. மச்சான பாத்தீங்களா -LR ஈச்வரி பாடணும் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்ல, வாய்ப்பு வந்த
முதல் படத்திலேயே தன் பிடியில் ஜானகிதான் பாடணும் என்று உறுதி காட்டியவர்.
13. TM சௌந்தர்ராஜனுக்கு பாவத்தோடு பாட வரவில்லை என்று கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நிகழ்வும் உண்டு.,
14. சிறந்த இசை அமைப்பாளர் விருது ஐந்து முறை வாங்கியவர்.
15. பத்ம பூஷன் & பத்ம விபூஷண் பட்டங்களுக்கு இவரால் பெருமை.
16. 2003 BBC நடத்திய வாக்கெடுப்பில் 165 நாடுகளில் , லக்க்ஷத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஓட்டுப்பதிவில் , ராக்கம்மா கைய தட்டு பாடல் முதல் 10 பாடல்களில் இருந்த பெருமைக்கு சொந்தக்காரர்.
17. சலீல் சவுதரி ஒருமுறை சொன்னார், இந்தியாவின் மிகப்பெரிய இசைஅமைப்பாளராய் ராஜா வருவார் என்று.
18. மூடுபனி - 100 வது படம்
19. கண்ணில் தெரியும் கதைகள் படம் 1980. நானொரு பொன்னோவியம் கண்டேன் இங்கே - பாடல் இவர் மெட்டு. மற்ற நாலு இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ், GK வெங்கடேஷ், TR பாப்பா , KV மஹாதேவன். பின்னணி இசை ராஜா சார்.
20. நீ நன்ன கல்லாரே -கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு ராஜா சார் மியூசிக் போட்ட ஒரே படம்.
21. கண்ணே ராதா . 1982. 200 வது படம்.
22. பாடல்களே இல்லாமல் BGM மட்டுமே அமைத்த முதல் படம் ஆக்சிடென்ட் - சங்கர் நாக் இயக்கம். 1984.
23. முதல் 3D படத்திற்கு இசை அமைத்தவர் . மை டியர் குட்டிச்சாத்தான். 1984.
24, 1985. உதய கீதம் . 300 வது படம்.
25. பாடல்களே இல்லாமல் வந்த அடுத்த படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. 1987.
26. 1988. வீடு. பாடல்களே இல்லாத படம். bgm இசைக்கு இந்தப்படம் ஒரு மைல்கல்.
27. 1989. ராஜா ராஜாதான். 500 வது படம். டைட்டில் செம்ம பொருத்தம் .
28. தேவர் மகன். 1992. 600 வது படம்.
29. வனஜா கிரிஜா . கேயார் இயக்கம். 1994. 700 வது படம்.
30. 2000. ஹே ராம். 900 வது படம். ஷூட் முழுவதும் முடிந்து , முதல் இசை அமைப்பாளரோடு முட்டிக்கொண்டு ராஜாவின் உதவி நாடிய கமலுக்கு , ரீ-ஷூட் பண்ணாமல் , தன் இசையால் சரிசெய்தார் , ராஜா சார்.
31. 1000 மாவது படம். தாரை தப்பட்டை . வருஷம் 2015.
32. ஆஸ்காருக்கு சென்ற அதிக படங்களுக்கு இசை அமைத்த பெருமை ராஜா சாருக்கு உண்டு. ஸ்வாதி முத்யம், நாயகன், தேவர் மகன், அஞ்சலி, ஹே ராம், அடூர் கோபாலக்ரிஷ்ணனின் நிழல்குத்து
33. கோவிட் சமயத்தில் , மானுடம் செழிக்க , 2020 இவர் அமைத்த பாரத பூமி என்ற பாடல் பிரபலம். பாடியவர், இணைபிரியா தோழன் SPB .
34. 1986 வருஷம் கம்ப்யூட்டர் மூலம் முதன்முதலில் இவர் இசை அமைத்த படம் விக்ரம்.
35. RK செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் 9 பாடல்களை 45 நிமிடங்களில் கம்போஸ் செய்தாராம். அசுர சாதனை அன்றி வேறன்ன சொல்ல.
36. ராம் லக்ஷ்மன் -1981- நான்தான் கொப்பண்டா மெட்டு 2012 சம்மர் ஒலிம்பிக்கில் தீம் சாங்காக மைந்தது.
37. கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் ராஜா சார் மெட்டுக்குத்தான் . கண்ணே கலைமானே !!!
38. மனைவி பெயர் ஜீவா. 2011 வருஷம் அவர் ராஜாவை விட்டு வைகுண்டம் அடைந்தார்.
39. கார்த்திக் ராஜா , யுவன் சங்கர் ராஜா , பவதாரிணி- வாரிசுகள் பெயர். மூவருமே இசை உலகத்தில்.
40. கர்நாடக இசையை TVG ( TV கோபாலகிருஷ்ணன்)யிடம் முறையாக கற்றுக்கொண்டார்.
42. இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி.
43. சிறுவயதில் பெல்பாட்டம் பாண்ட் , அகலமான பெல்ட் அணிவது பிடிக்கும்.
44. இப்போது , வெண்ணிற ஜிப்பா & வேஷ்டி மட்டுமே.
45. அமாவாசை & முக்கிய நாட்களில் தாயாரின் சமாதிக்கு சென்று தியானம் செய்ய தவறுவதில்லை.
46. காஞ்சி மஹா பெரியவர் ஆணைப்படி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஒருநிலையை கட்டி முடித்த புண்ணியம் உண்டு இவருக்கு.
47. திருவண்ணாமலை கிரிவலம் அவ்வப்போது நிகழ்த்துவார்.
48. ரமண மகரிஷி மீது அளவில்லா பக்தி கொண்டு நிறைய பாடல்கள் தானே இசை அமைத்து எழுதியுள்ளார். ரமண கீதம்.
49. விசிறிசாமியார் & குமரி மாயம்மா என்று ஆன்மீக நாட்டம் மிகுதியாய் உள்ளவர்.
50. இசை தவிர அவரை ஆக்கிரமிக்கும் ஒரே விஷயம் புகைப்படம் எடுப்பது. மிகச்சிறந்த புகைப்பட கலைஞரும் கூட என்று அவரோடு பயணித்தவர்கள் சொல்வதுண்டு .
51. 1986- ஹவ் டு நேம் இட் & 1988- நத்திங் பட் விண்ட் - இவரது இசை சாம்ராஜ்யத்தின் கவச குண்டலங்கள் .
52. திரை இசையில் ரீதி கௌல ராகத்தை முதன்முதலில் பிரயோகித்த மேதை. சின்னக்கண்ணன் அழைக்கிறான் .
53. அவர் பாடிய பாடல்கள் எவ்ளோ இருக்கும் . guess பண்ணுங்க. 50, 150, 225 ?????
மொத்தம் அவர் பாடிய பாடல்கள் 396.
54. கமல் படங்களுக்கு அதிகமாக இசை அமைத்தவர் ராஜா சார்தான். ஏறத்தாழ 100 படங்கள்.
55. அன்னக்கிளி காலம் தொட்டு இவரோடு பயணிப்பவர்கள், மதுரை சுந்தர் ( ட்ரிபிள் காங்கோ, தவில்)
சதா மாஸ்டர் ( கிட்டார் ), மறைந்த புருஷோத்தமன் ( ட்ரம்மர்), அருண்மொழி ( புல்லாங்குழல்), பெரிய பிரசாத் ( தபேலா டோலக் பாலா ( டோலக்)
56. ஒரு காலம்/நோட் தள்ளி இசை அமைத்த மரி மரி நின்னே பாடல் - சித்ராவுக்கு தேசிய விருது வாங்கி குடுத்த பாட்டு.
57. இவர் பாட கூப்பிட்டாலே 2-3 நாள் ரிஹர்சல் பண்ண ஆரம்பிச்சு விடுவேன்- மிகச்சிறந்த பாடகர் ஹரிஹரன் சொன்னது.
58. கன்னடத்தில் இந்த மெட்டுக்கு அந்த கவிஞர் 7 நாட்கள் மேலே எடுத்து கொண்டாராம்.
தமிழில் அந்த மெட்டுக்கு மின்னல் வேகத்தில் கண்ணதாசன் எழுதி குடுத்ததை சிலாகித்து சொல்வார் ராஜா சார். தேன் சிந்துதே வானம். உனை , எனை , தாலாட்டுதே
59. மேஸ்ட்ரோ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியதில் பெருமைப்படுகிறோம் என்று ROYAL PHILHARMONIC ORCHESTRA சொன்னார்கள்.
60. ஆரோகணம் மட்டுமே வருமாறு கல்யாணி ராகத்தில் புதுமை செய்து மெட்டமைத்த பாட்டு கலைவாணியே , உனைத்தானே அழைத்தேன் !!!!
61. பஞ்சமுகி என்ற ராகத்தை உருவாக்கியவர்.
62. விளம்பர படத்தில் நடித்து இருக்காரா ? நட்புக்காக தோன்றி, தன் இசையில் அவர் நடித்த விளம்பரம் மலபார் தங்க நிறுவனத்திற்கு மட்டுமே.
63. கவுன்டர் பாயிண்ட் என்ற யுக்தியை முதன்முதலில் தமிழ் இசையில் அறிமுகம் செய்தவர்.
என் கண்மணி காதலி !!!!!
64. அண்ணே !!! இந்த மெட்டு வேண்டாம் , வேற குடுங்க என்று சொல்லி, வையி !!! ஹிட் ஆகும் என்று சொல்லி , பின்னாளில் சக்கை போடு போட்ட பாடல் மாங்குயிலே பூங்குயிலே
65. சா ரீ கா என்ற மூன்றே மூன்று ஸ்வரங்களை வைத்து தெலுங்கில் மெட்டமைத்த பாடல் மிகப்பிரபலம் ஆயிற்று.
66. ஒரே வருஷத்தில் 52 படங்களுக்கு இசை அமைத்தவர் இவர் மட்டுமே. வருஷம் 1992.
67. 7000 பாடல்கள் , 1034 படங்கள் - சாம்ராஜ்யம் தொடரும் வெற்றியோடு
68. தேவி பாடலுக்கு - ஜனனி ஜனனி
சிவன் பாடலுக்கு - ஓம் சிவோஹம்
திருமாலுக்கு-மாயோனே மணிவண்ணா
69. உலகத்தில் மிகச்சிறந்த கம்போஸர் - லிஸ்டில் முதல் 25தில் இடம் பிடித்த ஒரே இந்தியன்.
2014- அமெரிக்க உலக சினிமா பாதிப்பு.
70. CNN -IBN 2013இல் எடுத்த இந்திய சினிமா-100 வருஷங்கள் என்ற ஆவணசெய்திக்கோர்ப்பில்
இந்தியாவின் மிகச்சிறந்த இசைஅமைப்பாளர் என்ற பட்டத்தை தட்டிச்சென்றவர்.
71.இளையராஜா சில படங்களில் நடித்துள்ளார். இளையராஜாகவே தான்.
72. இளையராஜாவும் பாலுமகேந்திராவும் ஒரே சமயத்தில் தங்கள் பயணத்தை துவக்கியவர்கள். மூடுபனி பாலு மகேந்திராவின் மூன்றாவது படம். ராஜாவின் நூறாவது படம். மூன்று வருடத்திற்கு சுமார் 33 படங்கள் வீதம் இசையமைத்திருக்கிறார்.
73.சுவரங்கள் எழுதி விட்டு இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் ராஜாவாகத்தான் இருக்கும். மொத்த இசைக்கலைஞர்களுக்கும் ஸ்வரம் எழுதி கொடுத்து விட்டு எழுத்துக்கள் இசையாக மாறும் இரசாயன வித்தை இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தம்.
74. இளையராஜா மருத்துவமனையில் இருந்த போது இசையமைத்த பாடல். “காதலின் தீபம் ஒன்று” விசில் அடித்தே மெட்டு போட்டுக் கொடுத்தார் ராஜா.
75. ஒரு ஹீரோவுக்கு இணையாக ஒரே சைஸ் கட் அவுட் வைத்தது ராஜாவுக்கு மட்டுமே. முரட்டுக் காளை படத்திற்காக.
76. ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாட்டில். கம்பி இசைக் கருவிகளே இல்லாமல் இசைத்திருப்பார் ராஜா.
77. ஶ்ரீ ரங்கம் ராஜ கோபுரத்தின் ஆறாவது நிலையை கட்டிக் கொடுத்த பெருமை ராஜாவின் இசைக்கு உண்டு.
78. இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல. ஒரு நல்ல நாவலாசிரியர் மற்றும் கவிஞர். பலருக்கு இது தெரியாது.
79. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே ரமண மாலை காசெட்டுக்காக போட்ட பாடல். அவரே பாடியது. அதைத்தான் நான் கடவுளில் மது பாலகிருஷ்ணனை வைத்து பாட வைத்திருப்பார் ராஜா. ஒரிஜினல் ரமண மாலை பாட்டுத் தான் உயிர் தொடும் பாட்டு.
80. விக்ரம் 2 ரிலீசாகப் போகும் நேரம். விக்ரம் படத்திற்கு மூன்றே கருவிகள் உபயோகித்துப் போட்ட டைட்டில் பாடல் விஞ்ஞான சாயலில் இருக்கும். காரணம் சுஜாதா.
அவருடைய பாடல்களின் சிறப்புக்களைப் பற்றி எழுதினால் 80,000 கூட எழுதலாம்.
இன்று 80வது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜாவுக்கு விகடகவி தனது வாழ்த்துக்களை உற்சாகத்தோடு தெரிவித்துக் கொள்கிறது.
ராஜா ராஜா தான். !!!
Leave a comment
Upload