தொடர்கள்
கவர் ஸ்டோரி
இலங்கையின் அழிவுக்கு ஶ்ரீரங்கம் கோபுரம் காரணமா ?? - ராம்

20220414093131191.jpg

ஶ்ரீ ரங்கம் கோவிலின் ராஜ கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்த வரை இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. அது கட்டி முடிக்கப்பட்டதும் தான் இலங்கை பற்றி எரியத் துவங்கியது என்று ஒரு செய்தி தமிழ்நாட்டில் உலாவுவது உண்டு.

இது பற்றிய உண்மை ஏதேனும் இருக்கிறதா என்று ஶ்ரீ ரங்கத்தில் வசிக்கும் வரலாற்று ஆராய்ச்சி ஆர்வலர் விஜயராகவன் என்பவரை தொடர்ந்து கொண்டு கேட்டதில் அவருடை கருத்துக்கள் இங்கே...

2022041409465648.jpg

(ஶ்ரீரங்க வாசி விஜயராகவன்.)

சார், இலங்கை பிரச்சினைக்கும் கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ராஜ கோபுரத்தில் பல கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் வல்லுனர்கள் பார்த்தாச்சு.

அதில் ஒரு சில நியமங்கள் விளக்கேற்றணும் அது இதுன்னு இருக்கே தவிர இந்த கோபுரத்தை கட்டினால் இலங்கை அழிந்து விடும் என்று எங்கும் இல்லை.

மேலும் நமது சனாதன தர்மத்தில் கோவில் கோபுரம் கட்டினால் இன்னொரு தேசம் அழியும் என்றும் எந்த முகாந்திரமும் கிடையாது.

இந்தியா என்பது புண்ணிய பூமி. நம்மூர்ல இருக்கிற ஆன்மீக சக்தி என்பது மகத்தானது.

சில பேர் சொல்கிறார்கள். பெருமாளை கோபுரம் கட்டி மறைச்சுட்டதாலதான் இலங்கையின் நேர்பார்வையில் மறைகிறது அதனால் இலங்கை கூச்சல் குழப்பம் என்று.

இது பெருமாளையே குறைத்து மதிப்பிடுவது போலத் தானே ?? ஒரு நேர்பார்வையில் மட்டுமா பெருமாளால் பார்க்க முடியும். அண்டசராசரங்களை அடக்கி ஆள்கிறான் என்று வைத்துக் கொண்டால் இது ஒரு அபத்தமான வாதம் இல்லையா ???

பின்ன ஏன் மொட்டை கோபுரமா வெச்சிருக்காங்கன்னு கேக்கலாம் ??

பணம் இல்லாமல் கட்டாம விட்டது தான் காரணம்.

மேலும் இன்னொரு விஷயம் தெரியுமா ?? ஒவ்வொரு 200 வருடங்களுக்கும் தன்னைத் தானே கட்டிக் கொண்டிருக்கிறது ஶ்ரீ ரங்கம் கோவில்.

20220414094754867.jpg

கோவிலொழுகு என்ற விஷயத்தில் கூர நாராயண ஜீயர் சொல்லியிருக்கிறார். யாரொருவர் ஶ்ரீ ரங்கம் கோவிலை அழிக்க நினைத்தாலும் அழிந்து போவார்கள் என்று.

இது படையெடுத்து வந்த மாலிகாபூர் படை வாசிகள் சந்தன மண்டபத்தில் மாமிசம் சமைத்து தின்ன போது உணர்ந்து ஓடிப் போனதாக செய்தி இருக்கிறது.

ஶ்ரீ ரங்கம் கோவிலுக்கும் இலங்கைக்குமான ஒரே கனெக்‌ஷன் விபீஷ்ணன் வந்து இங்கு பெருமாளை எழுந்தருளப் பண்ணியது தான். ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் விபீஷ்ணன் ஶ்ரீரங்கம் வருவதாக சொல்வதும் இதனால் தான்.

தயவு செய்து ராஜ கோபுரத்தை கட்டி முடித்ததால் தான் இலங்கை பிரச்சினை வந்திருக்கிறது என்ற கதையை இனியும் நம்பாதீர்கள்.

ஒரு ஶ்ரீரங்க வாசியாக விஜயராகவனின் ஆதங்கம் அவர் குரலில் தொனித்தது.