தொடர்கள்
கவர் ஸ்டோரி
மதனுடன் கல கல Talk!

20211027075320620.jpg

2021102509335238.jpegநம் விகடகவி ஆசிரியரும், பிரபல கார்ட்டூனிஸ்ட்டுமான மதன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பத்திரிகையுலகில் ஒரு அசகாய சூரராகவே கோலோச்சி வருபவர். இம்மாதம் தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் நம் ஆசிரியர் மதன். இந்த சந்தர்பத்தில் இவருடன் விகடகவி வாசகர்களுக்காக ஒரு கல கல டாக் செய்ய முடிவு செய்தோம். இதனை நம் வாசகர்களுக்காக அற்புதமாக செய்து கொடுத்தார் நம் விகடகவி இணையாசிரியரும் பத்திரிகையுலக ஜாம்பவானுமான ராவ் அவர்கள்.

இருவரும் ஆனந்த விகடன் பத்திரிகை அலுவலகத்தில் சக பத்திரிகையாளர்களாக அறிமுகமாகி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இணை பிரியா நண்பர்களாகவே இருப்பவர்கள் என்பது ஒரு தனிச்சிறப்பு. ஊரில் இருந்தால் நேரில் ஒரு முறையாவது தினசரி சந்தித்து உரையாடுவது இவர்களின் அன்றாட பழக்கம். இருவரது எழுத்துத்திறன் போட்டிகளையும் மீறி எப்போதும் நெருக்கமான அன்புடன் இந்த நண்பர்கள் இருப்பது கண்டு இவர்களோடு பணி புரிந்த அனைவருமே வியந்திருக்கிறோம். இந்த சந்திப்பிலும் அது அழகாய் வெளிப்பட்டது.

நான்கு பகுதிகளாக வரவிருக்கும் இந்த விடியோ சந்திப்பு விகடகவி தனது 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் வெளியாவது மற்றுமொரு சிறப்பு. இந்த சந்திப்பில் நடு நடுவே ஊடாடும் நம் நிருபர்களின் கேள்விகளும் உண்டு.

முதல் பகுதியில் தான் கார்ட்டூனிஸ்ட்டாக ஆசைப்பட்டு பத்திரிகையுலகில் நுழைந்தது, தன் சாதனையாள தாத்தாவின் இன்ஸ்பிரேஷன், மூத்த கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் கொடுத்த ஊக்கம், தன் அம்மா அளித்த ஆதரவு என சகலமும் பேசுகிறார் ஆசிரியர் மதன். கண்டு களியுங்கள் விகடகவி வாசகர்களே!