தொடர்கள்
ஆன்மீகம்
பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம்பியம்... வேங்கடகிருஷ்ணன்

20210807220257930.jpg

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 46-வது தலமாக விளங்குவது திருப்புறம்பியம். கும்பகோணம் அருகில் அமைந்து உள்ளது.

20210807220350246.jpg

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான் இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி விநாயகருக்குக் கூறினார். விநாயகரும் பொங்கிவந்த ஏழு சாகரங்களையும், இந்தத் தலத்தில் உள்ள திருக்குளத்துக்கு கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து இந்தத் தலத்தை அழியாமல் பாதுகாத்தார். அப்போது, வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை, கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர் திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர் என்று பெயரிட்டு வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். கிட்டத்தட்ட நூறு கிலோ அளவு அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும். தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பிரளயம் காத்த விநாயகர், நம்மையும் இந்த நோய்த் தொற்று காலத்தில் காத்தருளட்டும்.