தொடர்கள்
கவர் ஸ்டோரி
வேண்டாம் சசிகலா ஓபிஎஸ் திடீர் பல்டி... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20210630213809115.jpeg

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், டெல்லி பயணம்.. பிரதமர், அமித்ஷா இருவரையும் சந்திக்கிறார் என்று ஃபிளாஷ் நியூஸ் போன சில மணி நேரத்தில்... எடப்பாடி டெல்லி பயணம் என்றும் பிளாஷ் நியூஸ் போனது...

பிரதமர், அமித்ஷா இருவரும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் ஒன்றாகத் தான் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், ஓபிஎஸ் முன்னால் கிளம்பினார். எடப்பாடி பின்னால் போனார். ஓபிஎஸ் முன்கூட்டியே போனதற்கு சொல்லப்பட்டக் காரணம்... ஓபிஎஸ் மகனுக்கு வழங்கிய எம்பி குடியிருப்பில், பால் காய்ச்ச இருப்பதால் என்பதுதான்.

பிரதமரிடம்... எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தார்கள். ஆனால் பிரதமர், என்னால் அதில் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் பற்றி பேசும்போது... எங்கள் கட்சி எல்லா மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேலையை துவங்கி விட்டார்கள். தமிழ்நாட்டில்... நீங்கள் தினகரனுடன் இணைந்து, கட்சியை நடத்துங்கள் என்று ஆலோசனை சொன்னார். அப்போது ஓபிஎஸ் உடனே சரி என்றார். ஆனால் எடப்பாடி, நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அமித் ஷாவும் இதே கருத்தை தான் இருவரிடம் வலியுறுத்தினார்.

ஓபிஎஸ், சசிகலா பற்றி இதுவரை தவறாக எதுவும் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால்... அம்மாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கிறார், அவர் மேல் எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. இப்போது இருப்பதுபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையை ஏற்றுக்கொண்டால், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம் என்று தான் சொல்லியிருந்தார்.

திடுக்கிடும் திருப்பமாக... அதிமுக-வை யாராலும் கைப்பற்ற முடியாது என்று இரு தினங்களுக்கு முன் ஓபிஎஸ் சொல்லியிருக்கிறார்.

திமுக அரசை எதிர்த்து அதிமுக நடத்திய போராட்டத்தில் தேனியில் கலந்துகொண்ட ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்....

அப்போது... சசிகலா தொண்டர்களிடம் ஆடியோவில் பேசுவது, கட்சியை கைப்பற்றுவேன் என்று சொல்வது போன்றவற்றை பற்றி நிருபர்கள் கேட்டபோது... ஓபிஎஸ் நடந்து முடிந்த அரசியல் வரலாறுகளை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இன்றைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஜனநாயக வழியில் கட்சியை நடத்தி வருகிறோம். தனிப்பட்ட நபரோ குடும்பமோ கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையில் தற்போது அதிமுக கட்சி நடந்து வருகிறது. அதிமுக எந்த நோக்கத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது, அந்த வழியில் இப்போது அது நடந்து வருகிறது. எனவே அதிமுக-வை யாராலும் கைப்பற்ற முடியாது என்று சொல்லி, மறைமுகமாக சசிகலா வேண்டாமென்று தான் முடிவு செய்திருப்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்.

20210630224637185.jpeg

இதற்கும் ஒரு காரணம் உண்டு... எடப்பாடி ஆதரவாளர்கள், ஒற்றை தலைமை பற்றி அவரிடம் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் எடப்பாடி, எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வார். எனவே இப்போது ஒற்றை தலைமை பற்றிய பேச்சு வேண்டாம், அப்படி எதுவும் தேவையில்லை என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இதை சமீபத்தில்... டெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாக இருந்தபோது, அவரிடமே இதை தெரிவித்து விட்டார். அதைத்தான் தேனியில் ஓபிஎஸ் சொன்னார்.

டெல்லி நிருபர்கள் சந்திப்பின்போது கூட, எடப்பாடியார் நிருபர்களின் கேள்விக்கு பதில் சொன்னார். பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்த பின் நிருபர்களை சந்திக்கும்போது எடப்பாடி அருகில் இருந்தார். ஆனால், அவர் எதுவும் பேசவில்லை. சசிகலா பற்றி நிருபர்கள் கேட்டபோது... எடப்பாடி நன்றி வணக்கம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது நிருபர்களை எடப்பாடி மட்டுமே சந்தித்தார். ஓபிஎஸ் புறப்பட்டுவிட்டார்.

20210630224653859.jpeg

சசிகலா திடீரென மதுசூதனனை பார்த்தது கூட, கட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் அவைத் தலைவரும் அவருடன் இருந்தால்தான் அது சாத்தியம். எனவே மதுசூதனனின் உறவினர்களிடம்... சசிகலா, மருத்துவ செலவுகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார் என்று ஒரு தகவல் வெளியானது. இதேபோல் நீதிமன்றம் மனு ஒன்றில், மதுசூதனனின் கைரேகையை வாங்கியதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதையெல்லாம் எடப்பாடி தரப்பு மறுத்து வருகிறது.

சசிகலாவை, ஓபிஎஸ் ஆதரிப்பார் என்ற கருத்து நிலவி வந்த நிலையில்... அவரின் திடீர் சசிகலா எதிர்ப்பு, இப்போது திடுக்கிடும் அரசியல் திருப்பம் என்பது மட்டும் உண்மை.