தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க...

20210316121114343.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி.. ஹி.. ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...

பொள்ளாச்சி சந்தையில்....

“ஏனுங்க, அந்த சுடிதார் எவ்ளோ ஆவுது?”

“எம்..மிணி ஒன்ற வயசுக்கு அது நல்லவா இருக்கும், இந்த புடைவையை எடுத்துக்கோ, பாக்க நல்லா ருக்கும்..”

“ஒன்ற கண்ணுல கொள்ளிக்கட்டையைத்தான் வைக்கோணுமாக்கும், அது என்ற தங்கச்சிக்கு, ஏன் நான் போட்டா நல்லாருக்காதாமாக்கும், அத சொல்ல நீயி யாரு..?”

“ஏம்மா தாயே, இதையே எடுக்கோங்கம்மா, டாப்பா இருக்கும் (முனகியவாறே), எனக்கென்ன, பாக்கறவன் தான் கண் அவிஞ்சி சாவப்போறான்.

(அது காதில் விழாததால்)..
“அப்படி சொல்லி பழகு..” காசை கொடுத்து துணியை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

கடைக்காரர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.

சுந்தரி, பொள்ளாச்சி.


துரைப்பாக்கம் ரேஷன் கடையில்...

“என்ன கலாக்கா... ரெண்டு மூணு கார்ட் ரேஷன் வாங்கற, எப்படி?”

“இதெல்லாம் அந்ததந்த கார்ட் வூட்டு பசங்க. எனக்கு வாங்கி கொடுக்க வந்துருக்காய்ங்க..”

“எதுக்கு உனக்கு இவ்ளோ சாமான் லாம்?”

“லாக் டௌன் வருதாம், அதான், இப்போதான் கவருமென்ட் இல்லையாமே, மே மாசத்துக்கு அப்புறம் தான் வருதாம், அதான்..”

ரேஷன் கடையிலிருப்பவர்...

“இதுலயெல்லாம் விவரமா இருக்கிங்க... குத்தும்போது கோட்டை விட்டுறீங்க...”

சரி சரி.. பைய புடி...

ராமன். கண்ணகி நகர்.


வேலூர் - ஊரிஸ் கல்லூரி வாசலில்...

“என்னன்னே எங்களுக்கு சர்டிபிகேட் எப்போ கொடுப்பாங்க..”

“எக்ஸாம் வெக்கவே இல்ல, அப்புறம் என்னத்த கொடுக்கறது?”

“அதான் எல்லாரும் பாஸ்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் என்ன?”

“அடப்பாவி அது பத்தாம் வகுப்பு வரைக்கும் தாண்டா, நீயெல்லாம் என்ன படிச்சியோ, இதுல சர்டிபிகேட் வேற கேக்குற...”

“அண்ணே, அத காமிச்சு தான் கெத்தா கல்யாணம் பண்ணப்போறேன்னே..”

“ம்ஹ்ம் யாரு பெத்த பொண்ணோ, இவன்கிட்ட மாட்டிகிட்டு...”
யோசனையோடு கதவை மூட செல்கிறார்.

மரியா சிவானந்தம். வேலூர்.


போரூர் கடைத்தெருவில்...

“என்ன ஸ்ரீதர், இந்தப்பக்கம்..”

“கொரோனா பரவல் இருக்கே, அதான் அம்மாவை பாத்துக்கலாம்னு வந்தேன்..”

“உன் பொண்டாட்டி குழந்தைங்க ..?”

“அவங்க அங்கேயே தான் இருக்காங்க, நான் மட்டும் தான் வந்தேன்..”

“கொரோனா உன்ன காப்பாத்தி, நிம்மதியா இருக்க வைக்குது அம்மா கூட... உன்ன பொறுத்தவரைக்கும் கொரோனா ஹெல்ப் பண்ணுது..”

கண்ணடித்து சிரிக்கிறார்...

அவரும் சமாளித்து சிரிக்கிறார்.

ராம், போரூர்.


ராயபுரம் - ரெயினீ மருத்துவமனை அருகில்...

“ஏங்க... டாக்டர் என்ன சொல்லறார்?”

“இது கொரோனா இல்ல, சாதாரண ஜுரம்தான்னு சொல்லிட்டார்..”

“அப்புறம் என்ன... அப்பாவைக் கூட்டிகிட்டு போய்டா வேண்டியது தானே?”

“அதுல தானே பிரச்சனை, எங்கப்பாகிட்ட இதை சொல்லி கிளம்புப்பான்னு சொன்னா...”

“டேய், இங்க மூணு வேலையும் நல்லா சாப்பாடு கொடுக்கிறாங்க. டைமுக்கு டீ, பிஸ்கேட், பொட்டுக்கடலை, பேரிச்சம்பழம், சூப்புன்னு விதவிதமா கிடைக்குது. உங்கம்மா எனக்கு கஞ்சித்தண்ணி கூட ஊத்தமாட்டா, ஒரு ரெண்டு வாரமாவது நான் நிம்மதியா இருந்துட்டு வரேண்டா ங்கிறார்.”

“நீங்க என்ன பண்ணீங்க..”

“ரொம்ப பாவமா இருந்துதுனு, அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்...”

“யோவ், அவனவன் பெட் கிடைக்காம சாவறான், இவருக்கு நாக்கு செத்ததுக்கு பெட் கேக்குதா? நல்ல ஆளுப்பா...”

ஸ்ரீனிவாசன், ராயபுரம்.