அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதிரிகள் சம்பாதித்து கொள்ளலாம்!
ஐரோப்பாவின் ஸ்காண்டினேவியா பகுதியில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்வீடன் நாடு…
ஸ்வீடன் மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிஸியாக பணிகளை கவனித்து கொண்டு கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை போக்கி கொண்டு இருப்பார்கள்.
1986 பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை இரவு…. ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே தனது அலுவலக பணிகளை முடித்து விட்டு தனது பாதுகாவலர்களை ஓய்வு எடுக்க அனுப்பி விட்டார்.
ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே தனது மனைவி லிப்செட் உடன் அருகில் இருக்கும் திரையரங்கிற்கு சென்று இரவு காட்சி பார்க்க தயாரானார்கள்.
ஸ்வீடன் பிரதமர் மனைவி லிப்செட் தனது மகன் மார்டென் உடன் தொலைபேசியில் சினிமாவிற்கு போகிறோம் வருகிறாயா என்று கேட்டார்.
தான் ஏற்கனவே தனது காதலியுடன் அருகில் இருக்கும் திரையரங்கில் காமெடி படம் பார்க்க டிக்கெட் எடுத்து இருப்பதாகவும் நீங்கள் இருவரும் வந்தால் சேர்ந்தே சினிமாவிற்கு போவோம் என்று மகன் தெரிவித்தார்.
நீங்கள் இருக்கும் குடியிருப்பின் வெளியே வந்து நில்லுங்கள் அப்பாவும் நானும் உங்கள் அப்பார்ட்மெண்டுக்கு வந்து ஒன்றாக படம் பார்க்க செல்லலாம் என்று மகனிடம் ஸ்வீடன் பிரதமர் மனைவி லிப்செட் சொன்னார்.
ஸ்வீடன் பிரதமர் பால்மே தனது மனைவியுடன் இரவு 11 மணிக்கு ஸ்டாக்ஹோம் பழைய நகரத்தில் இருந்து கால்நடையாகவே நடந்து சென்று மகன் தங்கியிருந்த அப்பார்மெண்ட்க்கு கீழே சென்றனர்.
தனது மகனையும் அவரது காதலியையும் அங்கிருந்து அழைத்து கொண்டு ஸ்வீடன் பிரதமரும் அவரது மனைவியும் குடும்பமாக மெதுவாக பேசிகொண்டே கிராண்ட் சினிமா திரையரங்கம் நோக்கி நடந்து சென்றனர்.
ஸ்வீடன் பிரதமர் ஒல்ப் பால்மே குடும்பத்திற்கு எந்தவித பாதுகாப்பு வளையமும்,பாதுகாவலர்களும் உடன் வரவில்லை என்பதால் குடும்ப விஷயங்களை பேசி லயித்து போயினர்.
ஸ்வீடனில் வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் பொதுமக்கள் மதுவிருந்தும் கேளிக்கைகளிளும் ஈடுபட்டு மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.
ஸ்வீடன் பிரதமர் நடந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் புன்முறுவல் பூத்தப்படி கடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஸ்வீடனின் ஜன நெருக்கடியான சீவகன் சாலையில் ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே இரவு 11.21 மணிக்கு குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சாலையின் ஒரத்தில் இருந்த பளாட்பாரம் அருகில் உயரமான முழுநீள கருப்பு நிற முழு கோட் அணிந்திருந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே பின்புறம் தீடீரென நடந்து வந்தவன், தன் கையில் இருந்த ரிவால்வரை எடுத்து ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே முதுகை நோக்கி சுட்டான், சம்பவ இடத்திலேயே பிரதமர் ஒல்ப் பால்மே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழந்தார்.
அடுத்த துப்பாக்கி குண்டு ஸ்வீடன் பிரதமர் மனைவி மீது பாய்ந்தது. தீடீரென வந்த துப்பாக்கி சூட்டு சத்ததினை கேட்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஒடி வந்தனர்.
ஸ்வீடன் பிரதமர் சுடப்பட்ட இடத்திலிருந்து அவரை ஆறு நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு காவலர்கள் எடுத்து சென்றனர்.
துப்பாக்கி குண்டு ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே முதுகு தண்டுவடத்தில் பாய்ந்த வேகத்திலேயே அவர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்வீடன் பிரதமரின் மனைவி லிப்செட் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே துப்பாக்கியில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அடுத்த நாள் காலை ஸ்வீடன் நாளேடுகளில் தலைப்பு செய்தியாக, நாடே சோகத்தில் முழ்கியது.
ஸ்வீடன் பிரதமரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த கொலையாளி, முழுநீள கருப்பு கோட்டு அணிந்து சாலையில் பக்கத்து தெரு வழியாக ஒடி அங்கிருந்த மாடி படிகளில் ஏறி தாவி மறைந்தான் என பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
கொலையாளி பயன்படுத்திய துப்பாக்கி குண்டு ஒன்ரை மட்டும் காவல்துறையினர் தடய அறிவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்வீடன் பிரதமர் மனைவி மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு பிரதமர் இறந்தகிடந்த ப்ளாட்பாரம் அருகே இருந்து மற்றொரு துப்பாக்கி குண்டினை வழிப்போக்கர் ஒருவர் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இரண்டாவது துப்பாக்கி குண்டையும் தடய அறிவியல் துறை பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
பிரதமர் படுகொலைசெய்யப்பட்ட இடத்தில் அவரது ரத்தம் பாய்ந்து கரையாகிவிட்டது. போலீசார் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட இடத்தினை சுற்றி வளைத்து பொதுமக்கள் செல்லாமல் இருக்க டேப் கட்டி பாதுகாக்கவில்லை.
பிரதமர் படுகொலை நடந்த இடத்திற்கு வந்த பொதுமக்கள் மலர்கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்த தொடங்கினார்கள்.
பிரதமர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் வந்து சென்றதால், கொலையாளியின் கால் தடம் முற்றிலும் மறைந்து போனது. இதனால் ஸ்வீடன் பிரதமரை கொன்ற கொலையாளியின் கால்தடம், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்று பொருட்களை தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி பரிசோதனை செய்ய முடியாமல் திணறினார்கள்.
ஸ்வீடன் பிரதமரை சுட்ட நபரை நேரில் பார்த்ததாக சொன்ன 20 சாட்சிகளை கூட, காவல்துறையினர் சரிவர விசாரிக்கவில்லை.
மறுபுறம், பிரதமர் கொலையான இரவில்… ஸ்வீடன் நாட்டின் வான் மற்றும் தரை போக்குவரத்தும் எவ்வித தடையின்றி நடந்தது.
ஸ்வீடன் பிரதமர் படுகொலைக்கு யாரும் முன்வந்து பொறுப்பேற்கவில்லை…
பிரதமர் படுகொலை நடந்த போது ஸ்டாக்ஹோம் கவுண்டி காவல்துறையின் தலைமை அதிகாரி ஹான்ஸ் ஹோல்மர் தனது மனைவியுடன் பனிசறுக்கு விளையாடுவதற்கு ஸ்வீடனின் வடக்கு புறத்தில் விடுமுறையில் சென்றிருந்தார்.
விடுமுறையை ரத்து செய்துகொண்டு ஸ்டாக் ஹோம் காவல்துறை தலைமை அதிகாரி ஹான்ஸ் ஹோல்மர் வந்து பிரதமரின் படுகொலை நடந்த இடத்தை ஆராய்ந்து கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
பிரதமர் படுகொலை நடந்த பதினோழவது நாள், சந்தேகத்துக்கிடமான முதல் குற்றவாளியை போலீஸ் சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லப்பட்ட நபர், ரஷியாவின் கேஜிபி ஏஜெண்ட் என்ற தொனியில் விசாரணை துவங்கியது, பின்னர் எந்த ஆதாரமும் தீர்க்கமாக இல்லாததால், சந்தேக நபரை காவல்துறையினர் விடுவித்தனர்.
ஸ்வீடன் பிரதமரை கொன்ற குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை முழிபிதுங்கி நின்றது.
ஸ்வீடனில் இருந்த குர்திஸ் தீவிரவாதிகள் அடங்கிய பி.கே.கே தீவிரவாத அமைப்பினை, ஸ்விடன் பிரதமர் ஓல்ப் பால்மே பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் என்பதால் படுகொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்ற புதிய கோணத்தினை ஸ்டாக் ஹோம் காவல்துறை தலைமை அதிகாரி ஹான்ஸ் ஹோல்மர் அறிவித்தார்.
அதன்பின்னும், காவல்துறையினரால் ஸ்வீடன் பிரதமர் கொலைக்கான காரணத்தையும்ம், கொலையாளியையும் கண்டுபிடிக்க முடியாமல் நாட்கள் நகர்ந்தது.
கொலையாளியை நெருங்கி விட்டோம் என்று காவல்துறையினர் கீரல் விழந்த ரிக்கார்டை போல சொல்லி கொண்டே இருந்தனர்.
இரண்டாண்டுகள் ஆகியும் ஸ்வீடன் பிரதமர் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிய ஸ்டாக் ஹோம் காவல்துறை தலைமை அதிகாரி ஹான்ஸ் ஹோல்மர், வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு புதிய தலைமை புலனாய்வு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
1988 ஆண்டு புதிய புலனாய்வு அதிகாரி, ஸ்வீடன் பிரதமரை துப்பாக்கியில் கொன்ற கொலையாளி என கிறிஸ்டர் பீட்டர்சன் என்ற நபரை கைது செய்தார்.
ஸ்வீடன் பிரதமரை கொன்ற கொலையாளி என காவல்துறையால் கைது செய்யப்பட்ட கிறிஸ்டர் பீட்டர்சன், ஏற்கனவே துப்பாக்கி முனையில் இருக்கும் பைனெட்டால் ஒருவரை குத்தி காயம் ஏற்படுத்திய வழக்கிற்காக படுகொலை நடந்த சினிமா தியேட்டர் அருகே குற்றம் புரிந்து சில நாட்கள் சிறையில் கம்பி எண்ணி விட்டு வந்தார் என்று தகவல் வெளியானது.
ஸ்வீடன் பிரதமர் கொலையாளி என் சந்தேகப்படும் கிறிஸ்டர் பீட்டர்சன் அடர்ந்த புருவங்கள் கீழ் உதடு பெரியதான வாய் மற்றும் விலங்கு போன்ற தோற்றமுடைய கண்களை கொண்டிருந்தான்.
எதற்காக ஸ்வீடன் பிரதமரை கொன்றான் என்ற விவரங்கள் கொலையாளியிடம் இருந்து காவல்துறை விசாரணையில் கடைசி வரை பெறமுடியவில்லை .
ஸ்வீடன் பிரதமரை கொலை செய்தான் என்று குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டர் பீட்டர்சன் “மொடாக்குடிக்காரன்” என விசாரணையில் தெரிந்து போலீஸார் நொந்துவிட்டனர்
ஸ்வீடன் பிரதமரின் மனைவி தன் கணவரை கொன்ற நபர்களை அடையாள அணிவகுப்பு நடத்திய போது, தனது கணவரை கொன்றவன் கிட்டதட்ட கிறிஸ்டர் பீட்டர்சன் மாதிரி இருந்தான் என்று காவல்துறையினரிடமும் சிறைத்துறையினரிடமும் சொன்னார்.
ஒரு வழியாக ஸ்வீடன் பிரதமர் வழக்கு முடிவுக்கு வருகிறது என்று போலீஸார் அவசரமாக குற்றப்பத்திரிக்கை தயாரித்து கிறிஸ்டர் பீட்டர்சன் தான் கொலையாளி என நீதிமன்ற விசாரணைக்கு பைல்களை தயார் செய்து அனுப்பினர்.
1989 ஜீலை மாதம், ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே கொன்ற வழக்கில் கிறிஸ்டர் பீட்டர்சன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு சாகும் வரை ஆயுள் தண்டணையை சிறையில் கழிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்வீடன் பிரதமர் படுகொலையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கிறிஸ்டர் பீட்டர்சன் தனது வழக்கறிஞர் முலம் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார்.
ஸ்வீடன் பிரதமர் படுகொலையில் கொலையாளி பயன்படுத்திய துப்பாக்கியை வழக்கில் காவல்துறையினர் கொலை நடத்த பயன்படுத்தப்பட்ட சான்று பொருளாக கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்பதால் கீழ்மை நீதிமன்ற விசாரணையில் அளித்த தீர்ப்பினை ரத்து செய்வதாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்வீடன் பிரதமர் படுகொலையில் நிரபராதி என கிறிஸ்டர் பீட்டர்சன் ஆயுள் தண்டனை பெற்ற மூன்றே மாதத்தில் விடுதலையாகிவிட்டார்.
ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் பொய் வழக்கு போட்டு, அப்பாவி கிறிஸ்டர் பீட்டர்சனுக்கு ஆயுள் தண்டனை அளித்து, சிறையில் அடைத்தற்காக அவருக்கு 50000 டாலர் நஷ்ட ஈடாக ஸ்வீடன் அரசாங்கம் வழங்க உத்திரவிட்டது.
சிறையில் இருந்து விடுதலையான இரவு கிறிஸ்டர் பீட்டர்சன் தன் அபார்ட்மெண்ட் செல்லும் போது கையில் வோட்கா பாட்டில்கள் வாங்கி கொண்டு வாயில் சிகரெட் புகைத்து சென்றதை, அடுத்த நாள் காலையில் ஸ்வீடனின் முக்கிய செய்திதாள்களில் பிரசுரமானது.
ஸ்வீடன் பிரதமரை கொன்ற நிஜ கொலையாளி யார்? இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரியாமல் மக்கள் தவிக்க ஆரம்பித்தனர்.
ஸ்வீடன் பிரதமர் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு சம்பவ இடத்தில் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணிப்புரியும் ஸ்காண்டியா மனிதர் ஸ்டிக் எங்க்ஸ்ட்ராம் என்பவர் இருந்ததை அருகிலிருந்த 20க்கு மேற்பட்ட சாட்சிகள் உறுதி செய்தது.
ஸ்காண்டியா மனிதர் எங்க்ஸட்ராம் என்பவர் இதற்கு முன்பு சுவிடன் ராணுவத்தில் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றவர், அத்துடன் ஸ்வீடன் பிரதமர் கொல்லப் பயன்படுத்தப்பட்ட .357 துப்பாக்கியினை லாவகமாக குறிபார்த்து சுடுவதில் வல்லவர் என்ற அவரது ராணுவ ரிகார்டையும் காவல்துறை சரிபார்த்தது.
ஸ்வீடன் பிரதமர் படுகொலையை ஸ்காண்டியா மனிதர் எங்க்ஸட்ராம் செய்திருக்ககூடும் , ஆனால் புலனாய்வு அமைப்பினர் இவரை கொலை வழக்கின் பிரதான சாட்சியாக வைக்கப்பட்டுள்ளார் என்று பன்னிரெண்டு ஆண்டுகளாக கொலை வழக்கை ஆராய்ந்த சுவீடன் நாட்டு பத்திரிக்கை பில்டர் தனது புலனாய்வு கட்டுரையை வெளியிட்டது.
ஸ்வீடன் பிரதமர் படுகொலையில் ஸ்காண்டியா மனிதர் ஸ்டிக் எங்க்ஸட்ராம் ஈடுபட்டிருக்கலாம் என்று புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க சென்றபோது 2000 ஆண்டில் தனது மனைவி விவகாரத்து செய்தததால் மனம் நொந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது.
ஸ்வீடன் பிரதமரை ஸ்டிக் எங்க்ஸட்ராம் தான் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார் என்று நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை.
இவ்வளவு இளகிய மனம் கொண்ட ஸ்டிக் எங்க்ஸட்ராம் ஸ்வீடன் பிரதமரை கொன்றிருக்க வாய்ப்பேயில்லை என மக்கள் முணுமுணுக்க தொடங்கினர்.
ஸ்வீடன் பிரதமருக்கு எதிரிகள் யார் என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்பினர் ஆராய தொடங்கினார்கள்.
1968 ஆண்டில் செக்கஸ்லோவாக்கியா மீது சோவியத் படையெடுப்பு , வடவியட்நாமில் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது, தென்னாப்பிரிக்காவின் நிறவெறியின் கொடுரமான ஆட்சிக்கு எதிராக ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே தனது கண்டனங்களை உலக அரங்கில் ஓங்கி ஒலித்ததால் எதிரிகள் உருவாகி இருக்கலாம்.
ஸ்வீடன் ஆயுத நிறுவனமான போஃபர்ஸ் இந்திய ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை அமைக்க லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதையும் ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மன் கண்டுபிடித்ததால் கூட அவரது எதிரிகள் படுகொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் கொலைக்கான காரணம் என ஆராய்ச்சி தொடங்கியது.
ஸ்வீடன் போலீசார் தென்னாப்பிரிக்கா வரைக்கும் சென்று குற்றவாளிகளை பற்றி ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று பார்த்தும் எதுவும் பிடிபடவில்லை.
அதன்பின், 2001 ஆண்டில் குர்திஷ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அப்துல்லா ஓகலான் என்பவரை துருக்கி சிறையில் சென்று ஸ்வீடன் காவல்துறை அதிகாரிகள் கொலைக்கான காரணம் புலன் கிடைக்கிறதா என்று நேரடியாக சென்று பேசிவிட்டு வந்தனர். ஸ்வீடன் பிரதமர் படுகொலை குறித்து எந்த துப்பும் ஸ்வீடன் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
கடந்த 34 ஆண்டுகளாக ஸ்வீடன் பிரதமர் படுகொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஸ்வீடன் பிரதமர் கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய .357 துப்பாக்கியினை போலீஸார் கைப்பற்ற முடியவில்லை.
கொலையை நேரடியாக பார்த்த பல சாட்சிகள் தற்போது உயிருடனில்லை என்பதால் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக வழக்கில் எந்த முன்னேற்றமின்றி கிடப்பில் இருந்து வரும் ஸ்வீடன் பிரதமர் படுகொலை வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
தனது கணவரை கொன்ற குற்றவாளி யார் என்று தெரிந்து கொள்ளாமலே ஸ்வீடன் பிரதமரின் மனைவியும் மரணமடைந்துவிட்டார்.
தனது தந்தை கொலை தொடர்பான புலன் விசாரணையில் ஏற்பட்ட தொடர் தவறுகளினால், உண்மை குற்றவாளியை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டிக்க முடியாமல் போய்விட்டது என ஸ்வீடன் பிரதமர் மகன் வருத்ததுடன் தெரிவிக்கிறார்.
34 வருடங்கள், 10000 சாட்சிகளிடம் நேரடி விசாரணை மற்றும் 134 பேர் கொலைக்கான ஓப்புதல் வாக்குமுலம் என காவல்துறையினர் புலனாய்வு செய்தும், ஸ்வீடன் பிரதமர் ஒல்ப் பால்மேனை படுகொலை செய்த நிஜ கொலையாளியை இது நாள் வரை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியவில்லை.
என்ன செய்வது, ஒரு நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டும் கொலையாளி யார் என்ற மர்மம் சிந்துபாத் கதை போல் நீண்டு கொண்டே இருக்கிறது!
Leave a comment
Upload