தொடர்கள்
தேர்தல் திருவிழா
அண்ணாமலை மீது ஓபிஎஸ் கோபம்- விகடகவியார்

20240319174856301.jpeg

விகடகவியார் வந்ததும்" இது நுங்கு ஜூஸ் வெயிலுக்கு நல்லது சூட்டை தணிக்கும். இது பண்ருட்டி பலாப்பழம் தேன் சுளை சாப்பிடுங்கள்" இது ஆபீஸ் பையன் கவனிப்பு பலமாக இருந்தது. விகடகவியார் "பலாப்பழம் சின்னம் காரர் அண்ணாமலை மீது ரொம்ப கோபத்தில் இருக்கிறார் "என்று பலாச்சுளை சாப்பிட்டபடியே விஷயத்துக்கு வந்தார். அப்போது நாம் "அண்ணாமலை தான் அவர் தொகுதியில் போய் பிரச்சாரம் செய்தாரே அப்புறம் என்ன ? "என்று கேட்டோம் அப்போது விகடகவியார்" அதெல்லாம் ஓகே ஆனால், தேனியில் அண்ணாமலை இப்படி பேசியிருக்கக் கூடாது என்று கோபப்படுகிறார் ஓபிஎஸ் என்றார். அப்போது நாம்" ஓபிஎஸ் கோபப்படும் படி அப்படி என்னதான் பேசினார் அண்ணாமலை என்று கேட்டோம்.

அதற்கு விகடகவியார் "ராமநாதபுரத்திற்கு ஓபிஎஸ்-க்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய வருவதற்கு முன்பு அண்ணாமலை டிடிவி தினகரனுக்காக குக்கர் சின்னத்தில் ஓட்டு போட பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை அந்த கூட்டத்தில் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி கைக்கு வந்து விடும் என்று பேசினார். அதிமுக எனக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தேர்தல் ஆணையத்திடம் மனு என்று மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், அவரை நம்பாமல் டிடிவி தினகரனிடம் அதிமுகவை ஒப்படைக்க பாஜக திட்டம் போட்டு இருக்கிறது. இது அண்ணாமலை சொல்லி நடக்கிறது என்று அவர் மீது கோபமாக இருக்கிறார் ஓபிஎஸ் "என்றார் விகடகவியார்.

நாம் "அப்போ இதெல்லாம் நடக்கிற காரியமா "என்று கேட்க அண்ணாமலை எப்போதும் பரபரப்புக்காக எதையாவது அடிச்சு விடுவார் அதே போல் தான் இது அதே சமயம் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா ஏதாவது வகையில் நமக்கு தொந்தரவு தரும் பொதுச்செயலாளர் விஷயத்தில் எனக்கு பக்க பலமாக எப்படி இருந்தீர்களோ அதே போல் இருக்க வேண்டும் என்று இப்போதே கட்சி நிர்வாகிகளிடம் உருக்கமாக பேசத் தொடங்கி விட்டார் எடப்பாடி "என்றார் விகடகவியார்.

"சரி தொகுதி நிலவரம் எல்லாம் எப்படி இருக்கிறது அதை சொல்லுங்கள்" நுங்கு ஜூசை நன்றாக உறிஞ்சி விட்டு பேச ஆரம்பித்தார் விகடகவியார் "உளவுத்துறை தரும் அறிக்கை ஒரு பக்கம் முதல்வரின் மருமகன் சபரீசன் சில பல விவரங்களை சேகரித்து முதல்வருக்கு அறிக்கையாக தந்து வருகிறார். கிட்டத்தட்ட எல்லா தொகுதிகளிலும் வலம் வந்த சபரீசன் கோவையில் எச்சரிக்கையாக இருக்க சொல்லி அபாய மணி அடித்திருக்கிறார்.

ஈரோட்டில் பிரச்சாரம் தீவிரமாக இருக்கட்டும். திமுக கோஷ்டி பூசல் வேறு போய் என்ன நடக்கிறது என்று விசாரி உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தார். சபரீசன் இப்படி பரபரப்பாக உண்மையில் தேர்தல் வேலை பார்ப்பது மாப்பிள்ளை தான்" என்றார் விகடகவியார்.

20240319175205510.jpeg

"சரி பாரதிய ஜனதாவில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதை சொல்லுங்கள் "என்றோம் ஒரு முக்கிய பாஜக தலைவர் எனது சோர்ஸ் அவர் சொன்னது திருநெல்வேலி வேலூர் கூட்டணி வேட்பாளர் குக்கர் சின்ன சொந்தக்காரர் என்பது ஆனால் அவர் அண்ணாமலையை சொல்லவில்லை.

அதே சமயம் இந்த முறை திராவிட கட்சிகளுக்கு ஈடாக பணத்தை வாரி இறைத்து இருக்கிறது பாரதிய ஜனதா. கோவை தொகுதிக்கு தனி கவனிப்பாக 50 கோடி பட்டுவாடா ஆகி இருக்கிறது இப்படி தொகுதிக்கு 20 கோடி 15 கோடி என்று தொகுதியில் செல்வாக்கு ஏற்ப பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது. கமலாலயத்தில் சிலர் இந்த பண பட்டுவாடாவில் கமிஷன் அடித்து கோடீஸ்வரர் ஆகிவிட்டார்கள் அது வேறு கதை.

அதேசமயம் வாக்குச்சாவடி முகவர்கள் கூட தேடிப் பிடிக்க வேண்டிய அலைச்சலில் தான் இப்போதும் பாஜக இருக்கிறது. கூட்டணிக் கட்சிக்காரர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் முகவர்கள் இவர்களை பாஜக போட்டியிடும் தொகுதிகளில் முகவர்களாக பணம் கொடுத்து நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா "என்றார் விகடகவியார்.

2024031917513479.jpeg

"சரி காங்கிரஸ் விஷயத்துக்கு வாரும் "என்று சொன்னோம் "நீரும் முதல்வர் மாதிரி காங்கிரஸ் கட்சி பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டீர்களா" என்ற காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் கோஷ்டி பூசலால் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு பெரிய அளவு சொல்லிக் கொள்ளும்படி திமுகவை நம்பி தான் வேட்பாளர் இருக்கிறார். இதனை புகாராகவே முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் சொல்ல இதெல்லாம் எனக்குத் தெரியும் தானே நான் ராகுல்காந்திக்கு அவர்களை வெற்றி பெறச் செய்வதாக வாக்கு தந்திருக்கிறேன். அதற்காக போய் வேலை பாருங்கள்"என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற விகடகவியார் "நாளை மறக்காமல் ஓட்டு போட்டு விடுங்கள் அது ஜனநாயக கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட "என்று மெசேஜ் சொல்லிவிட்டு புறப்பட்டார்.